அண்ணாமலை ஊழல் பட்டியல் வெளியிடுவது குறித்து திமுகவிற்கு எந்த கவலையும் இல்லை என்று சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.
திமுக அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களின் ஊழல் பட்டியலை ஏப்ரல் 14-ஆம் தேதி வெளியிடுவதாக கடந்த சில மாதங்களுக்கு முன்பாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்திருந்தார்.
அந்தவகையில் சென்னை தியாகராயர் நகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் தலைவர் அண்ணாமலை இன்று திமுக அமைச்சர்கள், நாடாளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்களின் ஊழல், சொத்து பட்டியல் மற்றும் தனது ரஃபேல் வாட்ச் ரசீதையும் வெளியிட்டார்.
அண்ணாமலை ஊழல் பட்டியலை வெளியிட்டது குறித்து சட்டத்துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களிடம் பேசியபோது,
“ஊழல் பட்டியலை வெளியிடுவது குறித்து திமுகவிற்கு எந்த கவலையும் இல்லை.
எங்களுக்கு மடியில் கனமில்லை. அதனால் வழியில் பயமில்லை. தமிழக ஆளுநர் ரவி சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட 11 மசோதாக்களுக்கு இன்னும் ஒப்புதல் அளிக்காமல் காலம் தாழ்த்தி வருகிறார்” என்றார்.
செல்வம்