அமைச்சர் பொன்முடியின் வீட்டில் சோகம்: முதல்வர் ஆறுதல்!

Published On:

| By Kavi

உயர்கல்வித்துறை  அமைச்சர் பொன்முடியின் சகோதரர், மருத்துவர் க.தியாகராஜன் (64) உடல்நலக்குறைவால் இன்று (ஜனவரி 17) அதிகாலை உயிரிழந்தார். 

அமைச்சர் பொன்முடியின் சகோதரர் க.தியாகராஜன்.  இவர் சிறுநீரக சிறப்பு அரசு மருத்துவராக பணியாற்றி வந்தார். உடல்நலக் குறைவு ஏற்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். 

ஆனால் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை க.தியாகராஜனின் உயிர் பிரிந்தது. 

தற்போது அவரது உடல் விழுப்புரத்தில்  உள்ள வீட்டில் வைக்கப்பட்டுள்ள நிலையில், மாலை 4.30 மணியளவில் இறுதி சடங்கு நடைபெறுகிறது. 

பின்னர் விழுப்புரம் – பாண்டி ரோடு காந்தி சிலை எதிரில் மரகதம் மருத்துவமனையிலிருந்து இறுதி ஊர்வலம் தொடங்கப்பட்டு மருதூர் இடுகாட்டில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது. 

க.தியாகராஜனின்  மறைவுக்கு இரங்கல் தெரிவித்து தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின், “உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடியின் தம்பியான மருத்துவர் க. தியாகராஜன் மறைவெய்தினார் என்ற செய்தியால் மிகவும் வேதனையுற்றேன். உடன்பிறந்த தம்பியை இழந்து தவிக்கும் அமைச்சர் பொன்முடிக்கும், அவர்தம் குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்களையும் ஆறுதலையும் கூறிக்கொண்டு அவர்களது துயரில் பங்கெடுக்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார். 

பிரியா

‘நாட்டு நாட்டு’ பாடல் உருவானது எப்படி?

பொது இடங்களில் முகக்கவசம்: தமிழ்நாடு அரசின் நிலை என்ன?

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share