பாஜகவில் இருந்து விலகிய மதுரை சரவணன் எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார்.
திமுகவில் 2019 ஆண்டு திருப்பரங்குன்றம் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட்டு எம்.எல்.ஏவாக ஆனவர் மருத்துவர் சரவணன். அவருக்கு மீண்டும் சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட வாய்ப்பளிக்கவில்லை.
அதனால் அதிருப்தியில் இருந்த அவர் திமுகவில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தார். அப்போது மதுரை மாவட்ட பாஜக தலைவராக நியமிக்கப்பட்டார் சரவணன்.
மதுரையில் நிதியமைச்சர் பழனிவேல் ராஜன் கார் மீது பாஜகவினர் காலணி வீசிய விவகாரத்தில், பழனிவேல் தியாகராஜனை அவரது இல்லத்தில் சந்தித்து வருத்தம் தெரிவித்தார் சரவணன். இதனையடுத்து பாஜகவில் இருந்து அவர் நீக்கப்பட்டார்.
இதையடுத்து சரவணன் மீண்டும் திமுவில் இணைய இருப்பதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் அதை அவர் மறுத்தார்.
இந்தநிலையில் அவர் அதிமுகவில் இணைந்துள்ளார். சென்னையில் எடப்பாடி பழனிச்சாமி இல்லத்தில் அவரை சந்தித்து தன்னை அதிமுகவில் இணைத்துக் கொண்டார்.
கலை.ரா