“ஓமந்தூரார் மருத்துவமனை தலைமை செயலகமாக மாற்றப்படாது” – மா.சுப்பிரமணியன்

Published On:

| By Selvam

ஓமந்தூரார் மருத்துவமனை தலைமை செயலகமாக இடமாற்றம் செய்யப்படாது என்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

தலைமை செயலகத்தில் கடும் இடநெருக்கடி நிலவுவதால் ஓமந்தூரார் வளாகத்தில் உள்ள கட்டிடத்திற்கு தலைமை செயலகத்தை மாற்ற வேண்டும் என்று தமிழ்நாடு தலைமை செயலக சங்கம் முதல்வர் ஸ்டாலினுக்கு கடிதம் அனுப்பியது.

இதற்கு கண்டனம் தெரிவித்த முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் ஓமந்தூரார் தோட்ட வளாகத்தில் தலைமை செயலகம் அமைக்கும் முடிவினை கைவிட வேண்டும் என்று வலியுறுத்தினார்.

இந்தநிலையில் ஓமந்தூரார் மருத்துவமனை தலைமை செயலகமாக மாறாது என்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

சென்னை கிண்டி கலைஞர் பன்னோக்கு மருத்துவமனையில் ரூ.8.72 கோடி செலவில் புதிதாக மருத்துவ உபகரணங்கள் வழங்கும் விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய மா.சுப்பிரமணியன், “கலைஞர் பன்னோக்கு மருத்துவமனையில் நாள்தோறும் 500-க்கும் மேற்பட்ட புறநோயாளிள் மற்றும் 100 உள்நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த அதிமுக ஆட்சியில் ஓமந்தூரார் மருத்துவமனையில் ஒன்றரை ஆண்டுகளில் 100 அறுவை சிகிச்சைகள் செய்தனர். திமுக ஆட்சியில் 65 நாட்களில் 117 அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டுள்ளது.

திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு ஓமந்தூரார் மருத்துவமனைக்கு ரூ.34 கோடியில் புற்றுநோய்க்கான அதிநவீன கருவி வழங்கப்பட்டது. ஓமந்தூரார் மருத்துவமனையை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை அதிமுக ஆட்சியில் 400 முதல் 500-ஆக இருந்தது. தற்போது அந்த எண்ணிக்கை 1200-ஆக உள்ளது. அதனால் ஓமந்தூரார் மருத்துவமனை தலைமை செயலகமாக  மாறாது” என்று தெரிவித்துள்ளார்.

செல்வம்

சர்ப்ரைஸ்… இது மோடோரோலாவின் சர்ப்ரைஸ்!

நிலவில் ஆய்வை துவங்கிய ரோவர்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel