தருமபுரி தொகுதியில் தற்போதைய நிலவரப்படி திமுக முன்னிலையில் உள்ளது.
தருமபுரி தொகுதியில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் மனைவி சவுமியா போட்டியிட்டார். திமுக சார்பில் மணி போட்டியிட்டார்.
இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில், காலைமுதல் திமுகவுக்கும், பாமகவுக்கும் இடையே கடும் போட்டி நிலவி வந்தது.
தொடர்ந்து சவுமியா அன்புமணி முன்னிலை வகித்தார்.
இந்தநிலையில் திமுக வேட்பாளர் மணி, சவுமியா அன்புமணியை பின்னுக்கு தள்ளி சுமார் 1500 வாக்குவித்தியாசத்தில் முன்னிலையில் இருக்கிறார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
ராமநாதபுரம் : ஓ.பன்னீர்செல்வம் வாக்குகளை கைப்பற்றினார்களா ‘ஓபிஎஸ்’கள்?
அதிமுக, பாஜக, தமாகா-வை பின்னுக்குத் தள்ளிய நாம் தமிழர் கட்சி!