அதிமுகவை தொட்டார் கெட்டார்… யாரை கூறுகிறார் ஜெயக்குமார்?: கரு நாகராஜன் பதில்!

Published On:

| By christopher

karu nagarajan reply on jayakumar warning annamalai

அதிமுகவை தொட்டார் கெட்டார் என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியது பாஜகவினரை அல்ல, முதலமைச்சர் மு.க ஸ்டாலினை தான் என்று கரு.நாகராஜன் தெரிவித்துள்ளார்.

சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள சித்தி விநாயகர் துர்க்கை அம்மன் கோவிலின் ஆடி மாத திருவிழாவை முன்னிட்டு ஆயிரம் பக்தர்களுக்கு சமபந்தி விருந்து இன்று (ஆகஸ்ட் 9) நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்வை பாஜக மாநில துணைத்தலைவர் கரு. நாகராஜன் முன்னிலை வகித்து தொடங்கி வைத்தார்

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த கரு நாகராஜன், ”விருதுநகரில் கட்சியினுடைய சொந்த இடத்தில் வைத்த பாரதமாதாவின் சிலையை அனுமதி இல்லை என்று போலீசார் அகற்றி இருப்பது கண்டிக்கத்தக்கது. மீண்டும் நாங்கள் கடிதம் கொடுத்திருக்கிறோம். மாநில தலைவரும் அந்த இடத்திற்கு செல்ல இருக்கிறார்.

அங்கே பாரத மாதா சிலை, திருவள்ளுவர் சிலை, தமிழன்னை சிலை நிறுவப்பட உள்ளது என்பதையும் நான் கூறி கொள்கிறேன்.

செந்தில் பாலாஜி எந்த குற்றம் செய்தாலும் விசாரணை காவலில் எடுக்கக்கூடாது. நாங்கள் தேவ தூதர்கள் வானில் இருந்து வந்தவர்கள் என்று கூறியவர்களிடம் சட்டப்படி எல்லாம் ஒன்றுதான் என்பதை நீதிமன்றம் தீர்ப்பாக வழங்கியுள்ளது

செந்தில்பாலாஜி கைது செய்யப்பட்டுள்ளார். விசாரணை கைதி எண் கொடுக்கப்பட்டுள்ளது. சிறைக்கு சென்றுள்ளார். ஆனால் ஆட்கொணர்வு மனு போடுவார்கள். இது போன்ற வேடிக்கை எல்லாம் தமிழகத்தில் மட்டும் தான் நடக்கும்.

நீதிமன்ற தீர்ப்பு மிகத் தெளிவாக வந்திருக்கிறது. விசாரணை விரைந்து முடிக்க சொல்லி உச்ச நீதிமன்றம் சொல்லி இருக்கிறது. பல்வேறு ஆவணங்கள் அவர் மறைத்திருக்கிறார். அந்த ஆவணங்களின் விளக்கங்கள் எல்லாம் அமலாக்கத்துறை கேட்டுக் கொண்டிருக்கிறது. அதனை பொறுத்திருந்து பார்ப்போம்.

அதிமுக பாஜக கூட்டணி என்பது தமிழகத்தில் செயல்படுகிற கூட்டணி. தேசிய அளவில் தான் நாங்கள் கூட்டணி இங்கே கூட்டணி கிடையாது என்றால் அது சரி வராது. தேசிய அளவில் இருக்கிற தலைவர்களிடம் பேசிக் கொள்வோம் இங்கே பேச மாட்டோம் என்று சொன்னாலும் சரி வராது. இப்படி யார் பேசினாலும் அது வருத்தத்துக்குரியது. கூட்டணி தர்மத்தை முன்னிட்டு தவிர்க்க வேண்டும் என்பது தான் எங்களுடைய கருத்து.

திமுக 2024 தேர்தலில் எந்த ஒரு இடத்திலும் வெற்றி பெறக் கூடாது என்ற சபதம் எடுத்துள்ளோமோ அந்த சபதத்தை நோக்கிய பேச்சுக்களையும் கருத்துகளையும் மட்டுமே வெளியிட வேண்டும்

அதிமுகவை தொட்டார் அவர் கெட்டார் என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறுவது முதலமைச்சர் மு.க ஸ்டாலினை, எங்களை அல்ல” என்று கரு.நாகராஜன் கூறினார்.

கடந்த 4ஆம் தேதி சென்னையில் நடந்த அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்திற்கு பின்னர் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார்.  அப்போது அவரிடம் தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தொடர்ந்து அதிமுகவை விமர்சித்து வருவது குறித்து கேட்கப்பட்டது.  அதற்கு அவர், “அதிமுகவின் ஒரு அடிமட்ட தொண்டனை விமர்சனம் செய்தால் கூட கடுமையான கண்டனத்தை நாங்கள் தெரிவிக்க தவறியதில்லை.

அதிமுகவை தொட்டார் கெட்டார் என்பது அண்ணாமலைக்கும் தெரியும். எனவே இதுபோன்ற விமர்சனங்களுக்கு முற்றுப் புள்ளி வைக்க வேண்டியது அண்ணாமலையின் பொறுப்பு” என்று ஜெயக்குமார் விமர்சித்திருந்தார்.

கிறிஸ்டோபர் ஜெமா

”அவரால் தான் நான்…”: இயக்குநர் சித்திக் மறைவால் சூர்யா உருக்கம்!

கைது செய்வதாக மிரட்டும் ஸ்மிருதி இரானி… ஆ.ராசா புகார்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share