77 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை கோட்டை கொத்தளத்தில் இன்று (ஆகஸ்ட் 15 ) தேசியக் கொடி ஏற்றினார்.
பின்னர் சுதந்திர தின நிகழ்ச்சியில் பேசிய அவர், ”விடுதலை போராட்ட தியாகிகளின் குடும்பத்தினருக்கு வழங்கப்பட்டு வரும் மாதாந்திர ஓய்வூதியம் ரூ.10,000-ல் இருந்து ரூ.11,000ஆக உயர்த்தி வழங்கப்படும். பேருந்தில் பெண்கள் இலவசமாக பயணம் செய்யும் திட்டத்திற்கு “விடியல் பயணம்” என்று பெயர் சூட்டப்படுகிறது” என்றார்.
மேலும், ”ஓலா, ஊபர், சொமோட்டோ ஊழியர்களின் நலனை பாதுகாக்க தனிநல வாரியம் அமைக்கப்படும். பெண் ஆட்டோ ஓட்டுநர்கள் , புதிய ஆட்டோ வாங்க 1 லட்சம் மானியம் வழங்கும் திட்டம் மூன்றாம் பாலினத்தவர்களுக்கும் விரிவுபடுத்தப்படும். அனைத்து அரசு பள்ளிகளிலும் காலை சிற்றுண்டி வழங்கும் திட்டம் ஆகஸ்ட் 25 முதல் விரிவாக்கம் செய்யப்படும்.
சென்னை கத்தீட்ரல் சாலையில் உள்ள செங்காந்தள் பூங்காவிற்கு அருகே 6.9 ஏக்கர் நிலத்தில் 25 கோடி செலவில் கலைஞர் நூற்றாண்டு பூங்கா அமைக்கப்படும்” என்று பேசினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.
மு.வா.ஜெகதீஸ் குமார்
சுதந்திர தின விழா: கோட்டையில் கொடியேற்றினார் ஸ்டாலின்