“நீட் மசோதாவிற்கு எந்த காலத்திலும் ஒப்புதல் அளிக்க மாட்டேன்” – அடுத்த சர்ச்சையில் ஆளுநர் ரவி

Published On:

| By Selvam

governor ravi says neet students

நீட் தேர்வு மசோதாவிற்கு எந்த காலத்திலும் ஒப்புதல் அளிக்க மாட்டேன் என்று ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.

சென்னை ஆளுநர் மாளிகையில் எண்ணித் துணிக என்ற தலைப்பில் நீட் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுடன் ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று (ஆகஸ்ட் 12) கலந்துரையாடல் நிகழ்ச்சி நடத்தினார்.

இந்த நிகழ்ச்சியின் போது மாணவரின் பெற்றோர் ஒருவர் “நீட் தேர்வு விலக்கு மசோதாவிற்கு எப்போது ஒப்புதல் அளிப்பீர்கள்? நீட் தேர்வில் தேர்ச்சி பெறாமல் மருத்துவரான பலர் திறமையாக மருத்துவம் பார்க்கின்றனர். நிறைய பெற்றோர்கள் நீட் பயிற்சிக்கு பணம் செலுத்த முடியாததால் இந்த கேள்வியை உங்கள் முன்பாக வைக்கிறேன்” என்று தெரிவித்தார்

அதற்கு பதிலளித்த ஆளுநர் ஆர்.என்.ரவி, “நீட் விலக்கு மசோதாவிற்கு நான் எந்த காலத்திலும் ஒப்புதல் அளிக்க மாட்டேன். இருப்பினும் நீட் தேர்வு பொதுப்பட்டியலில் இருப்பதால் குடியரசு தலைவர் தான் இதுகுறித்து முடிவெடுப்பார். மாணவர்கள் அறிவுத்திறனை குறைக்க நான் விரும்பவில்லை. அவர்கள் கல்வியில் சிறந்த இடத்தை பெற வேண்டும் என்று விரும்புகிறேன். பயிற்சி மையத்தில் படித்தால் தான் நீட்டில் வெற்றி பெற முடியும் என்ற போலியான பிம்பத்தை உருவாக்கியுள்ளனர். நீட் பயிற்சிக்கு செல்லாமல் நிறைய மாணவர்கள் தேர்வில் வெற்றி பெற்றுள்ளனர். பள்ளிகளிலேயே மாணவர்களுக்கு நீட் தேர்வுக்கான பயிற்சி அளிக்கப்படுகிறது. நீட் தேர்வுக்கு ஆசிரியர்கள் பயிற்சி அளிக்காததால் தான் மாணவர்கள் தனியார் பயிற்சி மையத்திற்கு செல்கின்றனர். நீட் தேர்வு இந்தியாவில் தொடர்ந்து இருக்கும்” என்று தெரிவித்தார்.

செல்வம்

“நீட் மசோதாவிற்கு எந்த காலத்திலும் ஒப்புதல் அளிக்க மாட்டேன்” – அடுத்த சர்ச்சையில் ஆளுநர் ரவி

அரசு பள்ளிகளில் மட்டும் இது போன்ற சம்பவங்கள் நடைபெறுவது ஏன்? – அண்ணாமலை

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel