ஐந்து மாநில தேர்தல் கருத்துக்கணிப்பு முடிவுகள் இன்று (நவம்பர் 30) வெளியாகிறது.
நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னதாக மத்தியபிரதேசம், ராஜஸ்தான், மிசோரம், தெலங்கானா, சத்தீஸ்கர் ஆகிய ஐந்து மாநிலங்களுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதில் தெலங்கானா தவிர மற்ற அனைத்து மாநிலங்களிலும் வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்து விட்டது.
தெலங்கானா மாநிலத்தில் இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு துவங்கி நடைபெற்று வருகிறது. மாலை 6 மணி வரை தேர்தல் நடைபெற உள்ளது. வாக்குப்பதிவு முடிந்த பிறகு இன்று மாலை தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகிறது.
நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னோட்டமாக பார்க்கப்படும் ஐந்து மாநில சட்டமன்ற தேர்தலில் யார் ஆட்சியை பிடிக்க போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு அரசியல் கட்சிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது.
தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்புகளின் படி ராஜஸ்தான் மாநிலத்தில் பாஜகவும், மத்தியபிரதேசம், சத்தீஸ்கரில் காங்கிரஸ், தெலங்கானா மாநிலத்தில் பிஆர்எஸ், காங்கிரஸ் இடையே கடும் போட்டி, மிசோரம் மாநிலத்தில் தொங்கு சட்டசபை அமையலாம் என கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியானது.
தேர்தலுக்கு பின்னும் கருத்துக்கணிப்பு முடிவுகள் அதே போல இருக்குமா அல்லது மாற்றம் ஏற்படுமா என்பது இன்று மாலை தெரியவரும்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
கனமழை: செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து 6000 கன அடி நீர் திறப்பு!