ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை தேமுதிக எதிர்கொள்கிறதா? புறக்கணிக்கிறதா? என்பது தொடர்பாக கட்சித் தலைமை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
ஈரோடு கிழக்கு தொகுதிக்கு வரும் பிப்ரவரி 5ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது.
கடந்த காலங்களில் காங்கிரஸ் போட்டியிட்ட இந்த தொகுதியில் இந்த முறை திமுக களமிறங்குகிறது. திமு.க சார்பில் அக்கட்சியின் கொள்கை பரப்பு துணைச் செயலாளர் வி.சி.சந்திரகுமார் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
எதிர்க்கட்சியான அதிமுக, தேமுதிக பாஜக நிலைப்பாடு குறித்து தமிழக அரசியலில் எதிர்பார்ப்பு நிலவி வந்த நிலையில், அதிமுக இந்த தேர்தலை புறக்கணிக்கிறது என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துவிட்டார்.
அதிமுகவை தொடர்ந்து தேமுதிகவும் இந்த தேர்தலை புறக்கணிப்பதாக அக்கட்சி பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அறிவித்துள்ளார்.
அந்த அறிவிப்பில், “இதுவரை தமிழக தேர்தலில் நடக்காத ஒரு தேர்தலாக, ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் ஆடுகளை மந்தையில் அடைத்து வைத்தது போல் மக்களை அடைத்து வைத்து, ஜனநாயக விரோத தேர்தலை திமுக நடத்தி வெற்றி பெற்றதாக அறிவித்தனர். அதே பாணி இடைத்தேர்தல் தான் மீண்டும் நடக்க போகிறது. எனவே ஜனநாயகத்திற்கு விரோதமாக நடக்கும் இந்த தேர்தலில் நம்பிக்கை இல்லாத காரணத்தால், இந்த ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை தேமுதிக புறக்கணிக்கிறது” என்று கூறியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பிரியா