எடப்பாடியிடம் கட்சிக்கு நெருக்கமான வட்டத்திலிருக்கும் முக்கியமான சிலர் பாஜகவுடன் மறுபடியும் கூட்டணிக்கு போவதற்கான வாய்ப்பு இருப்பதாக அடிக்கடி செய்திகள் வருகிறதே, உண்மையிலேயே அப்படி எதுவும் ப்ளான் இருக்கிறதா என்று கேட்டிருக்கிறார்கள்.
அதற்கு பதில் சொன்ன எடப்பாடி, அதற்கெல்லாம் வாய்ப்பு இல்லை. 5 மாதத்துக்கு முன்னாடி அக்டோபர் மாதமே நாம் பாஜகவுடன் கூட்டணி இல்லை என்பதை சொல்லிட்டோம்.
எஸ்.டி.பி.ஐ மாநட்டிலேயே 2024 நாடாளுமன்றத் தேர்தலில் மட்டுமல்ல, 2026 சட்டமன்றத் தேர்தலிலும் பாஜகவுடன் கூட்டணி இல்லை என்று உறுதியாக சொல்லிவிட்டோம்.
பாஜக சைட்லதான் நம்ம கூட சேர ரொம்ப முயற்சி பண்றாங்க. ஆனா அது கட்சியோட எதிர்காலத்துக்கு நல்லதில்ல அப்டின்னு சொல்லிட்டாராம்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
எலெக்சன் ஃப்ளாஷ்: ”எடப்பாடியுடன் தொடர்ந்து பேசுகிறது பாஜக” –ஆதரவாளர்களிடம் குமுறிய ஓ.பி.எஸ்