மக்களவைத் தேர்தல் 2024: நீங்கள் அறிந்துகொள்ள வேண்டிய 10 பாயின்ட்டுகள்!

Published On:

| By Selvam

டெல்லியில் இன்று (மார்ச் 16) செய்தியாளர்களை சந்தித்த தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், 2024-ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற உள்ளது என்று அறிவித்தார். மேலும், இந்தியாவில் 96.8 கோடி பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர், 55 லட்சம் வாக்குப்பதிவு இயந்திரங்கள் தேர்தல் பணிகளுக்காக பயன்படுத்தப்பட உள்ளது என்று தெரிவித்தார்.

தேர்தல் ஆணையர் வெளியிட்ட அறிவிப்புகள்:

1. 96.8 கோடி வாக்காளர்கள்,

2. 49.7 கோடி ஆண்கள், 47.1 கோடி பெண்கள்

3. 1.8 கோடி முதல்முறை வாக்காளர்கள்

4. 20 முதல் 29 வயதுக்கு இடைப்பட்ட 19.47 கோடி வாக்காளர்கள்

5. 10.5 லட்சம் வாக்குப்பதிவு மையங்கள்,

6. 1.5 கோடி தேர்தல் அலுவலக பணியாளர்கள்

7. 55 லட்சம் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்

8. வாக்குப்பதிவு இயந்திரங்களை எடுத்து செல்ல 4 லட்சம் வாகனங்கள் பயன்படுத்தப்பட உள்ளன.

9. 12 மாநிலங்களில் ஆண் வாக்காளர்களை விட பெண் வாக்காளர்களின் விகிதம் அதிகமாக உள்ளது.

10. ஆள்பலம், பணபலம், வதந்தி, தேர்தல் நடத்தை விதிகள் மீறல் போன்ற நான்கு சவால்கள் தேர்தல் ஆணையத்தின் முன் உள்ளன.

2023- 24 காலகட்டத்தில் நடைபெற்ற ராஜஸ்தான், தெலுங்கானா, மத்தியப் பிரதேசம், கர்நாடகா உள்ளிட்ட 11 மாநில சட்டமன்றத் தேர்தல்களில் சுமார் 3,400 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. பண பலத்தை தவறாக பயன்படுத்த அனுமதிக்க மாட்டோம்

தேர்தலில் வன்முறைக்கு இடமில்லை, வன்முறை தொடர்பான புகார்கள் கிடைக்கப்பெற்றால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

அரசியல் கட்சிகள் சமூக ஊடகங்களை பொறுப்புடன் கையாள வேண்டும்.

தனிப்பட்ட வாழ்கை, சாதி, மதம் குறித்து விமர்சிப்பவர்கள் மீது தேர்தல் நன்னடைத்தைக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும்.

தேர்தல் பணிகளில் குழந்தைகளை ஈடுபடுத்தக்கூடாது.

போலி செய்திகளை வாக்காளர்கள் நம்ப வேண்டாம்.

செல்வம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

சு.வெங்கடேசன், ஆர்.சச்சிதானந்தம்: மார்க்சிஸ்ட் வேட்பாளர்களின் பின்னணி என்ன?

என்னை கைது செய்தது சட்டவிரோதம்: நீதிமன்றத்தில் கவிதா

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share