டெல்லியில் அமித்ஷாவை சந்தித்த எடப்பாடி

Published On:

| By Selvam

அதிமுக பொதுச்செயலாளராக பொறுப்பேற்ற பிறகு முதல்முறையாக டெல்லி சென்ற எடப்பாடி பழனிசாமி இன்று (ஏப்ரல் 26) மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டாவை சந்தித்தார்.

இந்த சந்திப்பின் போது தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, தங்கமணி, ஜெயக்குமார், அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.சண்முகம் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலுக்கு பிறகு அதிமுக பாஜக கூட்டணி இடையே தொடர்ந்து மோதல் போக்கு நீடித்து வருகிறது.

இந்தசூழலில் எடப்பாடி பழனிசாமி டெல்லியில் இன்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்தது அரசியல் அரங்கில் மிக முக்கியமான பேசுபொருளாக மாறியுள்ளது.

இந்த சந்திப்பின் போது ஓ.பன்னீர் செல்வத்திற்கு பாஜக ஆதரவு அளிக்க கூடாது என்றும் பொதுச்செயலாளர் விவகாரத்தில் தேர்தல் ஆணையம் தெளிவான உத்தரவுகளை பிறப்பிக்க வழிவகை செய்ய வேண்டும் என்ற இரண்டு கோரிக்கைகளை அமித்ஷாவிடம் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளதாக அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

செல்வம்

“பிரதமர் வீடு கட்டும் திட்டத்தில் மெகா ஊழல்”: அன்பில் மகேஷ்

’எனக்கு பிரச்சனையே நீங்க தான்’ : பத்திரிகையாளரை திட்டிய மும்பை இந்தியன்ஸ் வீரர்!

டிஜிட்டல் திண்ணை: எடப்பாடி டெல்லி பயணம்: அஜெண்டா என்ன? 

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel

Comments are closed.