‘நீங்கள் நலமா?’ : புதிய திட்டத்தை தொடங்கி வைக்கும் முதல்வர் ஸ்டாலின்

Published On:

| By Kavi

Stalin announce new scheme neengal Nalama

வரும் 6ஆம் தேதி ‘நீங்கள் நலமா’ என்ற புதிய திட்டத்தை தொடங்கி வைக்கவுள்ளதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

மயிலாடுதுறையில் நடைபெற்ற அரசு விழாவில், மயிலாடுதுறை மாவட்டத்தின் புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், மயிலாடுதுறை, திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களில் முடிவுற்ற திட்டப் பணிகள் ஆகியவற்றை முதல்வர் ஸ்டாலின் இன்று (மார்ச் 4) திறந்து வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள் நேரு, எ.வ.வேலு, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், ரகுபதி, அன்பில் மகேஷ், மெய்யநாதன், டி.ஆர்.பி.ராஜா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் ஸ்டாலின்,

“தமிழ்நாட்டில் வாழ்கின்ற ஒவ்வொரு குடும்பமும் பயன்பெறும் வகையில், எல்லோருக்கும் எல்லாம் என்ற அடிப்படையில் பல்வேறு திட்டங்களைத் திராவிட மாடல் அரசு நிறைவேற்றி வருகிறது”

என்று கூறி இலவச பயணத் திட்டம், மகளிர் உரிமைத் தொகை, மக்களைத் தேடி மருத்துவம், நான் முதல்வன் என பல்வேறு திட்டங்களை பட்டியலிட்டார்.

தொடர்ந்து, “இந்தத் திட்டங்களுடைய பயன்கள் எல்லாம் உரிய மக்களுக்குப் போய்ச் சேர்ந்திருக்கிறதா என்று உறுதி செய்வதற்கு, ஒரு புது திட்டத்தை வருகின்ற 6ம் தேதி சென்னையில் தொடங்கி வைக்கப் போகிறேன்.

அந்தத் திட்டத்தின் பெயர் என்ன தெரியுமா?… ‘நீங்கள் நலமா?’ இந்த நீங்கள் நலமா? திட்டத்தின் மூலமாக, முதலமைச்சரான நான் உட்பட அமைச்சர்கள், தலைமைச் செயலாளர், அனைத்துத் துறைச் செயலாளர்கள், துறைத் தலைவர்கள், மாவட்ட ஆட்சித் தலைவர்கள் என பொதுமக்களான உங்களை தொலைபேசியில் தொடர்புகொண்டு, கருத்துகளை கேட்கப் போகிறோம்.

உங்கள் கருத்துகளின் அடிப்படையில், நம்முடைய அரசின் திட்டங்கள் மேலும் செம்மைப்படுத்தப்படும். முதற்கட்டமாக, நலத்திட்டங்கள் பற்றியும் அடுத்த கட்டமாக, அரசுத் துறைகளால் வழங்கப்படுகின்ற சேவைகள் பற்றியும் கருத்துகள் பெற்று அதன்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

இப்படி ஒவ்வொரு நாளும், மக்கள் பயன் அடையக்கூடிய வகையில் பார்த்துப் பார்த்து திட்டங்களை உருவாக்கிக்கொண்டு வருகிறோம்.

அதுவும் எந்த சூழ்நிலையில்? நிதி நெருக்கடி அதிகமாக இருக்கின்ற சூழ்நிலையிலும், எந்த மக்கள்நலப் பணிகளையும், திட்டங்களையும் நாம் நிறுத்தவில்லை. ஏனென்றால், மக்கள் தொண்டு ஒன்றுதான் ஆட்சியின் நோக்கம்” என்று குறிப்பிட்டார் மு.க.ஸ்டாலின்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

பிரியா

எலெக்சன் ஃப்ளாஷ்: இப்டியே உசுப்பேத்தி பிரிச்சி விட்றாதீங்க? திமுக அமைச்சர் சொன்ன கூட்டணி மேட்டர்

மோடி இதற்காகத்தான் திரும்ப திரும்ப தமிழகம் வருகிறார் : ஸ்டாலின்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share