திமுக எம்பி ஆ.ராசாவின் நாக்கை வெட்டிக் கொண்டு வந்தால் ரூ.1 கோடி பணமும், ஒரு ஏக்கர் நிலமும் வழங்கப்படும் என முகநூலில் சர்ச்சை கருத்து பதிவிட்ட இந்துத்துவா அமைப்பைச் சேர்ந்த நபரை போலீசார் கைது செய்தனர்.
கடந்த 6ஆம் தேதி பெரியார் திடலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்து மதம் குறித்து ஆ.ராசா பேசியதற்கு பாஜக மற்றும் இந்து முன்னணி கடும் எதிர்ப்பை தெரிவித்து வருகிறது.
இந்துக்கள் குறித்த கருத்தை திரும்ப பெற்று ஆ.ராசா மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும், அவரை கட்சியில் இருந்து திமுக தலைமை நீக்க வேண்டும் என்றும் அதிமுக மற்றும் பாஜகவைச் சேர்ந்தவர்கள் கூறி வருகின்றனர்.
இதற்கிடையே தனது கருத்து தொடர்பாக இதுவரை மன்னிப்பு கேட்காத ஆ.ராசா, சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தனது பேச்சுக்கு விளக்கம் அளித்துப் பேசினார்.
இதுகுறித்து அவர், ‘‘மன்னிப்பு கேட்க வேண்டும் என்கிறார்கள். மன்னிப்பு கேட்பது பெரிய விஷயம் இல்லை. மன்னிப்பு கேட்பது என்பது மனித மாண்பு. நான் மன்னிப்பு கேட்கத் தயார். என்ன மன்னிப்புன்னு சொல்லுங்க.
நாங்கள் இந்து மதத்துக்கு எதிரானவர்கள் இல்லை. இந்து மதத்தின் பெயரால் சொல்லப்படும் சனாதானத்துக்கு எதிரானவர்கள்’’ என தெரிவித்து இருந்தார்.

இதனிடையே மதுரை உசிலம்பட்டி அருகே உள்ள பசுகாரன்பட்டியில் வசிக்கும் இந்து மக்கள் புரட்சி படை என்ற அமைப்பை சேர்ந்த கண்ணன், திமுக எம்பி ஆ.ராசாவினை மிரட்டும் வகையில் முகநூல் மற்றும் யூடியுப் பக்கத்தில் கருத்து தெரிவித்திருந்தார்.
”ஆ.ராசா இந்துக்களுக்கு எதிராக செயல்பட்டு வருவதால் அவரது நாக்கை வெட்டிக் கொண்டு வந்தால் ரூ.1 கோடி பணமும், ஒரு ஏக்கர் நிலமும் வழங்கப்படும்” என்று தனது முகநூல் பக்கத்தில் கண்ணன் கடந்த 18ம் தேதி பதிவிட்டிருந்தார்.
இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த உத்தப்ப நாயக்கனூர் போலீஸார் கண்ணனை கைது செய்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கிறிஸ்டோபர் ஜெமா
பொறுப்பு தலைமை நீதிபதியாக பதவியேற்றார் டி.ராஜா
எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., படிப்புகளுக்கு விண்ணப்பிப்பது எப்படி?