படுகொலை செய்யப்பட்ட பகுஜன் சமாஜ் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு அஞ்சலி செலுத்த அக்கட்சியின் தேசிய தலைவர் நாளை (ஜூலை 7) சென்னை வருகிறார்.
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்த வழக்கறிஞர் ஆம்ஸ்ட்ராங் (54) நேற்று மாலை சென்னையில் படுகொலை செய்யப்பட்டார்.
இந்த கொலைக்கு கண்டனம் தெரிவித்த மாயாவதி தமிழக அரசு குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத் தர வேண்டும் என்று வலியுறுத்தினார். அவர், இன்று சென்னை வருவார் என்று தகவல்கள் வந்தன.
ஆனால் நாளை சென்னை வருவதாக தெரிவித்துள்ளார் மாயாவதி.
இந்தியில் இன்று (ஜூலை 6) அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “பகுஜன் சமாஜ் கட்சியின் கடின உழைப்பாளி…. அர்ப்பணிப்புள்ள மாநில கட்சித் தலைவர் ஆம்ஸ்ட்ராங் நேற்று மாலை சென்னையில் உள்ள அவரது இல்லத்திற்கு வெளியே படுகொலை செய்யப்பட்ட சம்பவம் சமூகம் முழுவதும் சோகத்தையும் சீற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இதுபோன்ற சம்பவங்கள் இனி நடைபெறாமல் தடுக்க அரசு உடனடியாக கடுமையான- தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மிகவும் சோகமான மற்றும் கவலையளிக்கும் இந்த சம்பவத்தின் தீவிரத்தை கருத்தில் கொண்டு, நாளை காலை சென்னை வருகிறேன். ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தவும், பாதிக்கப்பட்ட அவரது குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறவும் திட்டமிட்டுள்ளேன். கட்சித் தொண்டர்கள் அனைவரும் அமைதி காக்க வேண்டும்” என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பிரியா
சட்டென உச்சம் தொட்ட தங்கம், வெள்ளி விலை!
ஆம்ஸ்ட்ராங் கொலை… சிபிஐ விசாரிக்க வேண்டும்… பகுஜன் சமாஜ் கட்சியினர் சாலை மறியல்!