அண்ணாநகர் கார்த்தி வீட்டில் ரெய்டு: திமுகவினர் போராட்டம்!

Published On:

| By Kavi

ஜி ஸ்கொயர் நிறுவனத்துக்கு தொடர்புடையை இடங்களில் ரெய்டு நடந்து வரும் நிலையில், அண்ணாநகர் எம்.எல்.ஏ மோகன் மற்றும் அவரது மகனுக்கு தொடர்புடைய இடங்களிலும் ஐடி அதிகாரிகள் அலசி ஆராய்ந்து வருகின்றனர்.

குறைந்த காலக்கட்டத்தில் அதிக வருமானம் ஈட்டியதாகவும், வரி ஏய்ப்பு செய்ததாகவும் எழுந்த புகாரின் அடிப்படையில் தமிழகத்தின் முன்னணி நிறுவனமான ஜி ஸ்கொயர் தொடர்புடைய இடங்களில் சோதனை நடந்து வருகிறது.

தமிழ்நாடு, கர்நாடகா, உள்ளிட்ட மாநிலங்களில் செயல்படும் ஜி ஸ்கொயர் நிறுவனங்களுக்கு தொடர்புடைய இடங்களில் இன்று காலை முதலே சோதனை நடந்து வருகிறது.

சென்னையை பொறுத்தவரை சேத்துபட்டில் உள்ள தலைமை அலுவலகத்தில் சோதனை நடைபெற்று வருகிறது. நீலாங்கரையில் உள்ள ஜி ஸ்கொயர் உரிமையாளர் பாலா வீட்டிலும் சோதனையில் ஐடி அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

சென்னை அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்த திமுக எம்எல்ஏ மோகன் வீட்டிலும், அவரது மகன் கார்த்திக் வீட்டிலும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
இதனால் அங்கு குவிந்த திமுகவினர் ரெய்டை கண்டித்தும், மத்திய அரசுக்கு எதிராகவும் கோஷம் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

பிரியா

திருமண மண்டபங்கள், மைதானங்களில் மதுவுக்கு அனுமதி!

தோனிக்காக ஆட்டமிழந்தாரா ஜடேஜா?

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel