பாஜக தலைவர் அண்ணாமலையின் ரஃபேல் வாட்ச்சை அவரது நண்பர் சேரலாதன் ராமகிருஷ்ணன் என்பவரிடமிருந்து ரூ.3 லட்சத்திற்கு வாங்கியதாக தெரிவித்துள்ளார்.
பாஜக தலைவர் அண்ணாமலை இன்று கமலாலயத்தில் செய்தியாளர்களிடம் பேசியபோது, “சொந்த ஊரில் இருந்து வந்து சென்னையில் இருக்கிறேன். எந்த நேரத்திலும் கூட நான் சொந்த ஊருக்கு திரும்பி தான் செல்ல போகிறேன்.
என்னுடைய ரஃபேல் வாட்ச் பெல் அண்ட் ரோஸ் நிறுவனத்தினுடையது. இந்த வாட்சை தசால்ட் ஏவியேஷன்ஸ் நிறுவனத்துடன் சேர்ந்து பெல் அண்ட் ரோஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
தசால்ட் ஏவியேஷன்ஸ் நிறுவனம் என்பது ரஃபேல் போர் விமானத்தை தயாரித்த பிரெஞ்சு நிறுவனம் ஆகும்.
உலகத்தில் மொத்தம் 500 வாட்ச்கள் மட்டுமே உள்ளது. இது 147-வது வாட்ச் ஆகும். ரஃபேல் விமானம் எப்படி இருக்குமோ அதே போல தான் இந்த வாட்ச் இருக்கும். இரண்டு வாட்ச்கள் மட்டுமே இந்தியாவில் விற்பனை ஆகியுள்ளது.
இந்த வாட்சை நீங்கள் சாதாரணமாகக் கட்ட முடியாது. ஒரு செங்கல் போல இந்த வாட்ச் கனமாக இருக்கும்.
மும்பையில் எம்என்சி நிறுவனத்தில் வேலை பார்க்கும் மற்றொருவர் இந்த வாட்சை வைத்துள்ளார்.
நான் இந்த வாட்சை 2021-ஆம் ஆண்டு மே மாதம் 27-ஆம் தேதி சேரலாதன் ராமகிருஷ்ணன் என்ற நண்பரிடம் இருந்து ரூ.3 லட்சத்திற்கு வாங்கினேன்.
இந்த வாட்சை யாரும் இனிமேல் வாங்க முடியாது. ஏனென்றால் இந்த வாட்ச் மார்க்கெட்டில் இல்லை” என்று தெரிவித்தார்.
செல்வம்