அம்பேத்கர் பிறந்தநாளை முன்னிட்டு குடியரசு தலைவர் திரவுபதி முர்மு, குடியரசு துணை தலைவர் ஜெகதீப் தன்கர், பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி உள்ளிட்டோர் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
அம்பேத்கர் 132-வது பிறந்தநாள் விழா இன்று இந்தியா முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தியாவின் முதல் சட்டத்துறை அமைச்சரும் அரசியல் அமைப்பு சாசனத்தை உருவாக்கிய குழுவின் தலைவருமாக அம்பேத்கர் இருந்துள்ளார்.

ஒடுக்கப்பட்ட மக்கள் வாழ்வில் ஏற்றம் பெறுவதற்காக அம்பேத்கர் தனது இறுதி காலம் வரை தொடர்ச்சியான போராட்டங்களை முன்னெடுத்தார்.
சாதியை அழித்தொழித்தல், புத்தரும் அவர் தம்மமும், இந்தியாவில் சாதிகள், சூத்திரர்கள் யார் உள்ளிட்ட பல புத்தகங்களை எழுதியுள்ளார்.
அம்பேத்கர் 132-வது பிறந்தநாளை முன்னிட்டு இன்று ஹைதராபாத்தில் அமைக்கப்பட்டுள்ள அவரது 125 அடி உயர சிலையை தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் திறந்து வைக்கிறார்.

தமிழக அரசின் சார்பில் அம்பேத்கர் பிறந்தநாள் சமத்துவ நாளாக கொண்டாடப்படுகிறது. நேற்று அனைத்து அரசு அலுவலகங்களிலும் சமத்துவ நாள் உறுதிமொழி ஏற்கப்பட்டது.
இந்தநிலையில் அம்பேத்கரின் 132-வது பிறந்தநாளை முன்னிட்டு டெல்லி நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள அம்பேத்கர் உருவ படத்திற்கு குடியரசு தலைவர் திரவுபதி முர்மு, துணை குடியரசு தலைவர் ஜெகதீப் தன்கர், பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி உள்ளிட்டோர் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
செல்வம்
“உத்திரமேரூர் கல்வெட்டு 1,100 ஆண்டுகள் பழமை வாய்ந்தது”: மோடி