பாமக அதிமுக கூட்டணியில் இணையப் போகிறதா அல்லது பாஜக கூட்டணியில் இணையப் போகிறதா என்ற கேள்விக்கு நேற்று விடை எட்டப்பட்டிருக்கிறது. நேற்று (மார்ச் 17) பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாசின் உத்தரவின் பேரில் பாமக எம்.எல்.ஏ அருள் சேலத்திலிருந்து கிளம்பி 4 மணி நேரம் பயணம் செய்து சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள எடப்பாடி பழனிச்சாமி இல்லத்திற்கு சென்று, தனது ஐபோனில் இருந்து ஃபேஸ் டைம் செயலி வழியாக அன்புமணியும் எடப்பாடி பழனிசாமியும் நேரடியாக பேசுவதற்கு பாலம் அமைத்துக் கொடுத்தார்.
இந்த பேச்சுவார்த்தையில் அதிமுக-பாமக கூட்டணி உறுதியானது. இந்நிலையில் இன்று மதியத்திற்கு மேல் நவமி முடிவடைந்ததற்குப் பிறகு, பாமக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் மாலை 4 மணியளவில் தைலாபுரம் தோட்டத்தில் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்திற்குப் பிறகு பாமக தரப்பிலிருந்து அருள், ஏ.கே.மூர்த்தி உள்ளிட்ட 5 பேர் கொண்ட குழு அதிமுக தரப்புடன் தொகுதிப் பங்கீடு குறித்து பேசவுள்ளது.
7 மக்களவை தொகுதிகள் மற்றும் ஒரு ராஜ்யசபா முடிவாகியுள்ளதாகத் தெரிகிறது. எந்தெந்த தொகுதிகள் என்று முறையாகப் பேசவுள்ளதாக பாமக தரப்பில் சொல்லப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
ஆளுநர் பதவியை ராஜினாமா செய்கிறார் தமிழிசை
பொன்முடிக்கு மறுப்பு… ஆளுநரை டிஸ்மிஸ் செய்ய திமுக எம்பி கோரிக்கை!
Comments are closed.