கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணம் : குஷ்பு தலைமையில் விசாரணை குழு!

Published On:

| By Kavi

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணம் தொடர்பாக விசாரணை நடத்த பாஜக நிர்வாகியும் தேசிய மகளிர் ஆணைய உறுப்பினருமான குஷ்பு தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 6 பெண்கள் உள்பட 60 பேர் உயிரிழந்தனர். 150க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று மட்டும் 20 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.

இந்த வழக்கில் 20க்கும் மேற்பட்டோரை சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளனர்.
தமிழகத்தையே உலுக்கிய இந்த மரணம் தொடர்பாக தமிழக அரசுக்கு தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

இந்தசூழலில் கள்ளச்சாராயம் குடித்து 6 பெண்கள் உயிரிழந்த விவகாரத்தை தேசிய மகளிர் ஆணையமும் கையில் ஏடுத்துள்ளது. ஊடகங்களில் வெளியான செய்தி அடிப்படையில் தேசிய மகளிர் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணை நடத்த உள்ளது.

 

தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் குஷ்பு தலைமையில் மூன்று பேர் கொண்ட குழுவை தேசிய மகளிர் ஆணையம் அமைத்துள்ளது.

இந்நிலையில் விரைவில் குஷ்பு கள்ளக்குறிச்சி விரையவுள்ளார் என தகவல்கள் வருகின்றன.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

பிரியா

மிரட்டும் இந்திரா சிலை சென்டிமென்ட்: பிளாஷ்பேக் சொன்ன கராத்தே தியாகராஜன்

வேளச்சேரி, கோயம்பேட்டில் எஸ்கலேட்டருடன் நடை மேம்பாலம் : அமைச்சர் எ.வ.வேலு அறிவிப்பு!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share