ரூ.100 கோடி நிலமோசடி புகாரில் முன்னாள் அமைச்சரும் அதிமுக கரூர் மாவட்ட செயலாளருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் தாக்கல் செய்த முன்ஜாமீன் மனுவை கரூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் இன்று (ஜூன் 25) தள்ளுபடி செய்துள்ளது.
கரூர் மாவட்டம் மண்மங்கலம் தாலுகா குப்பிச்சிபாளையத்தை சேர்ந்த பிரகாஷ், தனக்கு சொந்தமான ரூ.100 கோடி மதிப்பிலான நிலத்தை எம்.ஆர்.விஜயபாஸ்கர் போலியாக பத்திரப்பதிவு செய்து கொலை மிரட்டல் விடுத்ததாக கரூர் காவல் நிலையம் மற்றும் எஸ்.பி அலுவலகத்தில் புகாரளித்தார். இதுதொடர்பாக கரூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர்.
இந்தநிலையில், நிலமோசடி வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. இதனால் தான் எப்போது வேண்டுமானாலும் கைது செய்யப்படலாம் என்று நினைத்த விஜயபாஸ்கர், கரூர் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.
இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த கரூர் முதன்மை அமர்வு நீதிபதி சண்முகசுந்தரம் எம்.ஆர்.விஜயபாஸ்கரின் முன் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தார்.
இந்தநிலையில், முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தலைமறைவாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எம்.ஆர்.விஜயபாஸ்கர் நிலமோசடி புகாரில் சிக்கியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக விவாதிக்கப்பட்டு வருகிறது.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணம் : குஷ்பு தலைமையில் விசாரணை குழு!
முதல் நாளே நாடாளுமன்றத்தை அதிரவைத்த எதிர்க்கட்சிகள்…இரண்டாவது நாளில் மோடிக்கு காத்திருந்த ஷாக்