கிச்சன் கீர்த்தனா: வெஜ் – ஹெல்த் சூப்

Published On:

| By christopher

Veg Health Soup Recipe

ஈரப்பதம் நிறைந்த சூழ்நிலையில் மனதை இதமாக்குவது சூப் வகைகள். இந்த  வெஜ் – ஹெல்த் சூப், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்; ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.

என்ன தேவை?

முளைகட்டிய  பச்சைப்பயறு, கொள்ளு, ராஜ்மா, கொண்டைக் கடலை – தலா 2 டேபிள்ஸ்பூன்
தக்காளி – ஒன்று
மிளகுத்தூள், சீரகத்தூள் – தலா அரை டீஸ்பூன்
உப்பு – சிறிதளவு

எப்படிச் செய்வது?

தக்காளியைத் தண்ணீரில் வேகவைத்து எடுத்து தோல் நீக்கவும். முளைகட்டிய பயறு வகைகளுடன் சிறிது உப்பு, தண்ணீர் சேர்த்து நன்கு வேக வைக்கவும். தண்ணீரில் குழைய வெந்திருக்கும் பயறுகளுடன் தக்காளியைச் சேர்த்து நன்கு மசித்து, பெரிய கண் உள்ள வடிகட்டியால் வடிகட்டவும். வடிகட்டிய சூப்புடன் உப்பு சேர்த்து அடுப்பில் வைத்து கொதிக்கவிட்டு, மிளகுத்தூள், சீரகத்தூள் தூவி சூடாகப் பரிமாறவும்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கிச்சன் கீர்த்தனா: டொமேட்டோ – பிரெஞ்ச் ஆனியன் சூப்

கிச்சன் கீர்த்தனா: பனிவரகு கஞ்சி வித் பப்பட்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share