தென் இந்தியாவின் முதல் வந்தே பாரத் ரயில் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று (நவம்பர் 11) பெங்களூரு – சென்னை இடையே துவக்கி வைத்தார். இது இந்தியாவில் துவங்கப்பட்டுள்ள 5வது வந்தே பாரத் ரயில் திட்டமாகும்.
சென்னை – மைசூரு வந்தே பாரத் ரயில்!
16 பெட்டிகளுடன் 1,228 பேர் அமர்ந்து செல்லக்கூடிய வகையில், இந்த வந்தே பாரத் ரயில் அமைக்கப்பட்டுள்ளது.
மைசூரு முதல் சென்னை வரை 479 கி.மீ தொலைவை 6 மணி நேரம் 30 நிமிடங்களில் வந்தே பாரத் ரயில் கடக்கும்.

வந்தே பாரத் ரயிலானது பெங்களூரு சந்திப்பு மற்றும் காட்பாடி சந்திப்பு ஆகிய இரண்டு ரயில் நிலையங்களில் மட்டும் நின்று செல்கிறது.
புதன்கிழமை தவிர்த்து வாரத்தின் அனைத்து நாட்களிலும் வந்தே பாரத் ரயில் இயக்கப்படுகிறது.
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து அதிகாலை 5.50 மணிக்கு புறப்படும் வந்தே பாரத் ரயில், காலை 10.25 மணிக்கு பெங்களூரு போய்ச் சேரும். பின்னர் 12.30 மணிக்கு மைசூரு சந்திப்பைச் சென்றடையும்.
மைசூரு சந்திப்பிலிருந்து மதியம் 1.05 மணிக்கு புறப்படும் வந்தே பாரத் ரயிலானது பெங்களூரு சந்திப்பிற்கு 2.55 மணிக்கு வந்தடையும். ஐந்து நிமிட இடைவேளைக்குப் பிறகு புறப்பட்டு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தை மாலை 7.35 மணிக்கு வந்தடையும்.
வந்தே பாரத் ரயில் கட்டணம், சிறப்பம்சம்!
வந்தே பாரத் ரயிலில் சென்னையிலிருந்து மைசூரு செல்ல சாதாரண கட்டணம் ரூ.1,200 ஆகும். முதல் வகுப்பு கட்டணம் விலை ரூ.2,295 ஆக உள்ளது.

மைசூருவிலிருந்து சென்னை வருபவர்களுக்கு சாதாரண கட்டணம் ரூ.1,365 வசூலிக்கப்படுகிறது. முதல் வகுப்பில் பயணம் செய்ய ரூ.2,468 வசூலிக்கப்படுகிறது.
வந்தே பாரத் ரயிலின் அனைத்துப் பெட்டிகளிலும் தானியங்கி கதவுகள் உள்ளன. ஜிபிஎஸ் கருவி பொருத்தப்பட்டுள்ளது.
பயணிகள் அனைவருக்கும் இலவச ஹாட்ஸ்பாட் மற்றும் வைஃபை வசதி கொடுக்கப்பட்டுள்ளது.
சாதாரண வகுப்பில் சாய்வு இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளது. முதல் வகுப்பில் 180 டிகிரி சூழலக்கூடிய இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன.
பயணிகள் அனைவருக்கும் இலவச உணவு வழங்கப்படும். ஒவ்வொரு பெட்டியிலும் 32 இன்ச் எல்.இ.டி டிவி பொருத்தப்பட்டுள்ளது.
சதாப்தி – வந்தே பாரத் ரயில்!
அதிகபட்சமாக 160 – 180 கி.மீ வேகத்தில் பயணிக்கும் வந்தே பாரத் ரயிலானது, சதாப்தி ரயிலை விட 75 – 77 கி.மீ வேகத்தில் பயணிக்கும்.
சதாப்தி ரயில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில், காலை 6 மணிக்கு புறப்படுகிறது. காலை 8.50 மணிக்கு ஜோலார் பேட்டை ரயில் நிலையத்தை அடையும் ரயில்,
பெங்களூரு ரயில் மார்க்கத்தை 10.45 மணிக்கு சென்றடையும். மைசூரு ரயில் நிலையத்தை மதியம் 1 மணியளவில் சென்றடைகிறது. 72 கி.மீ வேகத்தில் பயணிக்கும் சதாப்தி ரயில் 7 மணி நேரத்தில் சென்னை – மைசூரு பயணத்தை கடக்கிறது.

மைசூரு ரயில் நிலையத்தில் மதியம் 2.15 மணிக்கு புறப்படும் சதாப்தி ரயில், இரவு 9.30 மணிக்கு சென்னை வந்தடையும். 70 கி.மீ வேகத்தில் பயணிக்கும் சதாப்தி ரயில் 7.15 மணி நேரத்தில் சென்னை வந்தடையும்.
சதாப்தி ரயிலில் சாதாரண கட்டணத்தில் பயணம் செய்ய ரூ.795 மற்றும் முதல் வகுப்பில் பயணம் செய்ய ரூ.1,510 கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
வந்தே பாரத் மற்றும் சதாப்தி ரயில் பயணம் நேரம் 30 நிமிடங்கள் மட்டுமே வேறுபட்டுள்ளது.
செல்வம்
ராஜீவ் கொலை வழக்கில் நளினி விடுதலை!
“அறிவுரை தான் வழங்கமுடியும் நடவடிக்கை எடுக்கமுடியாது” – கே.என்.நேரு
Comments are closed.