ஜூன் 25 செவ்வாயன்று இந்திய பங்குச் சந்தை குறியீடுகள் வர்த்தக அமர்வின் போது புதிய சாதனை உச்சத்தை எட்டிய பின்னர் சென்செக்ஸ் 712.44 புள்ளிகள் உயர்ந்தும் நிஃப்டி 183.45 புள்ளிகள் உயர்ந்து 23,721.30 புள்ளியில் கூர்மையான லாபத்துடன் முடிவடைந்தன.
பெரும்பாலான துறை சார்ந்த பங்குகள் சரிவை சந்தித்தாலும், தகவல் தொழில்நுட்ப துறை குறியீடுகள் புதிய உச்சங்களை அளவிட உதவியது.
புதிய அரசு பதவி ஏற்ற பிறகு இந்த ஆண்டுக்கான பட்ஜெட், ரிசர்வ் வங்கி கவர்னர் சக்தி கந்தா தாஸ் அறிவித்துள்ள பணவீக்க விகிதம் மற்றும் நேற்று வெளியிடப்பட்ட அமெரிக்க நுகர்வோர் நம்பிக்கைத் தரவுகள் காரணமாக அமெரிக்க பங்குச் சந்தை வர்த்தகம் ஏற்ற இறக்கத்துடன் கலவையாக உள்ளது.
இதன் தாக்கம் காரணமாக இன்று இந்திய பங்குச் சந்தையில் ஃப்ளாட்டாக தொடங்கியது.
புதன்கிழமை காலை முதல் அமர்வில் அல்ட்ராடெக் சிமென்ட், ஐசிஐசிஐ வங்கி ஆகியவை அதிக லாபம் ஈட்டின.
செவ்வாய்க்கிழமை 5ஜி அலைக்கற்றை ஏலத்தின் முதல் நாள் அன்று 11,000 கோடி மதிப்பிலான ஏலத்தை அரசு பெற்றுள்ளதாக அறிவித்துள்ளது.
Block Deal எனப்படும் Off-line வர்த்தகத்தில் வேதாந்தா நிறுவனத்தின் பங்குகளை அதன் ஒரு புரமோட்டர் 7,300 கோடி மதிப்பிலான பங்குகளை விற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
புதன் கிழமை வர்த்தகத்தில் Axis Bank, GRSE, IndiGo, Havells India, DLF மற்றும் Tata Motors பங்குகள் மீது கவனம் செலுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
-மணியன் கலியமூர்த்தி