மக்களவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை நாளான ஜூன் 4ம் தேதி செவ்வாய்க்கிழமை இந்திய பங்குச் சந்தை வரலாறு காணாத வீழ்ச்சியை சந்தித்த நிலையில், நேற்று வர்த்தக முடிவில் பெஞ்ச்மார்க் முக்கிய குறியீடுகள் சராசரியாக 3% க்கு மேல் உயர்ந்தன. தேசிய பங்குச்சந்தை நிஃப்டி குறியீடு 735 புள்ளிகள் உயர்ந்து 22,620.35 புள்ளியிலும், மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ் 2303 புள்ளிகள் உயர்ந்து 74,382 புள்ளியிலும் முடிவடைந்தது.
கடந்த செவ்வாய்க்கிழமை வர்த்தகத்தில் பொதுத்துறை நிறுவன PSU பங்குகள் கடும் சரிவை சந்தித்த நிலையில் இரண்டாவது நாளாக புதன்கிழமை வர்த்தகத்திலும் பொதுத்துறை நிறுவன பங்குகள் BSE PSU குறியீட்டில் 4.5% வரை சரிவை கண்டது.
புதன்கிழமை இன்ட்ரா டே வர்த்தகத்தில் Bharat Dynamics Indian Bank, Cochin Shipyard, Engineers India, Mishra Dhatu Nigam, and IRFC பங்குகள் முறையே 5 முதல் 2 சதவீதம் வரை சரிந்தன. அதேநேரத்தில் Mazagon Dock Shipbuilders,NALCO, Hindustan Copper, SAIL, Container Corporation, ONGC, HUDCO, and NMDC நிறுவன பங்குகள் 3 முதல் 8% வரை உயர்ந்து லாபத்தைக் கொடுத்தன.
தேசிய பங்குச்சந்தை குறியீடு NSE புதன்கிழமை வர்த்தகத்தில் 1971 கோடி எண்ணிக்கையிலான பரிவர்த்தனைகளைச் செய்து உலக சாதனை படைத்துள்ளதாக அதன் அதிகாரப்பூர்வ X வலைதளத்தில் பதிவு செய்துள்ளது.
NSE இன்டெக்ஸில் ஹெச்டிஎஃப்சி வங்கி, எஸ்பிஐ, எல் அண்ட் டி நிறுவன பங்குகள் அதிக அளவில் வர்த்தகமாகின. Hero MotoCorp, M&M, Divi’s Labs, Bajaj Auto மற்றும் Britannia பங்குகளை வாங்க சில்லறை முதலீட்டாளர்கள் ஆர்வம் காட்டினர். GMM Pfaudler, EPL மற்றும் Anupam Rasayan நிறுவன பங்குகள் 52 வார சரிவை சந்தித்தன. தேசிய பங்குச்சந்தை நிஃப்டியில் அதானி போர்ட், இந்தஸ்இந்த் வங்கி, ஹிண்டால்கோ இண்டஸ்ட்ரீஸ், ஹீரோ மோட்டார் கார்ப் மற்றும் மஹிந்திரா அண்டு மஹிந்திரா நிறுவன பங்குகள் 6 முதல் 8 சதவீத லாபத்தைக் கொடுத்தன.
சிங்கப்பூரின் சன் மொபிலிட்டி பிரைவேட் லிமிடெட் உடன் கூட்டு வணிகம் தொடர்பான அறிவிப்புகள் வந்ததை அடுத்து இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் பங்குகள் புதன்கிழமை 3% க்கும் அதிகமாக உயர்ந்தன.
3500 கோடி மதிப்பில் அதானி பவர் நிறுவனம் சத்தீஸ்கரின் ராய்ப்பூரில் 2×800 மெகாவாட் அனல் மின் ஆலையை அமைக்கும் (TPP) ஆர்டரை பெற்றுள்ள பொதுத்துறை நிறுவனமான BHEL நிறுவனத்தின் பங்கு 3.7% லாபம் உயர்ந்து 255.25 ரூபாயில் முடிவடைந்தது.
பெட்ரோலிய ஏற்றுமதி நாடுகளின் அமைப்பு (OPEC) 2025 வரை விநியோகக் குறைப்பை நீட்டித்த போதிலும், நான்கு மாதங்களில் இல்லாத அளவுக்கு சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை புதன்கிழமை குறைந்தது. ப்ரெண்ட் கச்சா எண்ணெய் கடைசியாக 24 சென்ட்கள் குறைந்து ஒரு பீப்பாய் விலை 77.27 டாலராக முடிவடைந்தது.
அமெரிக்க பொருளாதார தரவுகளான Nonfarm employment data, Nonfarm Payroll and Unemployment data . Fed’s policy decision அறிவிப்புகள் வரும் வாரத்தில் வெளிவர உள்ள நிலையில், புதன்கிழமை கமாடிட்டி வர்த்தகத்தில் தங்கம் விலை 80 ரூபாய் இறங்கி 10 கிராம் 72,900 ரூபாயிலும் வெள்ளி விலை 1470 ரூபாய் குறைந்து கிலோ 88930 ரூபாயிலும் முடிவடைந்தது.
SBI மியூச்சுவல் ஃபண்ட் (SBI MF) நிறுவனத்தின் நிகர முதலீட்டு மதிப்பு (Fund House AUM) 10 லட்சம் கோடியை எட்டியதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. நாட்டின் 10 லட்சம் கோடியை ஈட்டிய முதல் பரஸ்பர நிதி நிறுவனம் என்கிற சாதனை அடைந்துள்ளது SBI Mutual Fund நிறுவனம்..
இன்று வியாழக்கிழமை வர்த்தகத்தில் Zomato,Tata Consumer Products,TVS Motor,DMart நிறுவன பங்குகள் பரிந்துரை பட்டியலில் உள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
ஐபிஎல் தோல்விக்கு பிறகு வெற்றி முகம்… தனது கஷ்டகாலத்தை பகிர்ந்த ஹர்திக் பாண்டியா
”தோல்விக்கு தொண்டர்களை பழக்குவது பாவ காரியம்” : அதிமுக ஒன்றுபட பன்னீர் அழைப்பு!