ரத்தன் டாடா மறைவையடுத்து அனுபம் கெர், ரானா டக்குபாட்டி, பிரகாஷ் ராஜ்போன்ற திரைத்துறை பிரபலங்கள் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
வயது மூப்பு மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக இந்திய தொழிலதிபரான ரத்தன் டாடா (86) மும்பையில் உள்ள பிரீச் கேண்டி மருத்துவமனையில் நேற்று (அக்டோபர் 9) இரவு காலமானார். இதனை டாடா சன்ஸ் தலைவர் என். சந்திரசேகரன் உறுதி செய்தார்.
இதனையடுத்து ரானா டக்குபாட்டி, பிரகாஷ் ராஜ், அனுபம் கெர் போன்ற பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.
ரானா டக்குபாட்டி
தலைமைப் பண்பு, வள்ளல் குணம் மற்றும் நெறிமுறைகளின் சின்னம்!! அவரது பாரம்பரியம் தலைமுறைகளுக்கு ஊக்கமளிக்கும். இந்தியா இன்று ஒரு மாமனிதனை இழந்துள்ளது.
பிரகாஷ் ராஜ்
பல பேர்களுக்கு ஊக்கமளித்துள்ளீர்கள்…நன்றி ரத்தன் டாடா..வில் மிஸ் யூ (Will miss you)..ரெஸ்ட் இன் பீஸ் (Rest in Peace).
ராம் சரன்
நமது தேசத்திற்கு எவ்வளவு பெரிய இழப்பு! மாமனிதன் மற்றும் வழிகாட்டும் ஒளி, அவர் சாதாரண மனிதர் முதல் வணிக முன்னோடிகள் வரை பலரின் வாழ்க்கையைத் பாதித்துள்ளார். பரோபகாரி, ரத்தன் டாடா சாரின் பாரம்பரியம் மில்லியன் கணக்கான மக்களின் இதயங்களில் வாழும்!
அனுப்பம் கெர்
குட் பை மிஸ்டர் ரத்தன் டாடா!! உங்கள் வாழ்க்கை மற்றும் உங்கள் வாழ்க்கை பாடங்களுக்கு நன்றி! ஒரு பாரம்பரியத்தை விட்டுச் சென்றதற்கு நன்றி. இந்தியாவுக்கு மட்டுமல்ல! ஆனால் உலகத்திற்கும்.
நேர்மை, கடின உழைப்பு, இரக்கம், தேசபக்தி, மென்மை, பெருந்தன்மை போன்றவற்றிற்கு நீங்கள் ஒரு முன்னுதாரனம்.உங்களின் வாழ்க்கை மில்லியன் கணக்கானவர்களுக்கு ஊக்கமளித்துள்ளது, மேலும் பல நூற்றாண்டுகளுக்கு அது தொடரும்.
தனிப்பட்ட முறையில் சில ஆண்டுகளுக்கு முன்பு லண்டனில் நடந்த நமது சந்திப்பை என்னால் மறக்கவே முடியாது. நீங்கள் என்னிடம் மிகவும் அன்பாக ”மிஸ்டர் கெர்! உங்கள் நகைச்சுவை எனக்கு பிடித்திருக்கிறது! நீங்கள் என்னை சிரிக்க வைக்கிறீர்கள்” என்று சொன்னீர்கள்.
ஒவ்வொரு பாடத்திற்கும் நன்றி மிஸ்டர் டாடா! விழுமியங்கள் மற்றும் கொள்கைகளுடன் எப்படி வாழ வேண்டும் என்பதை நீங்கள் எனக்குக் கற்றுக் கொடுத்தீர்கள்! நீங்கள் எப்போதும் எனக்கு மிகவும் பிடித்த G.O.A.T. ஜெய் ஹோ!
–அப்துல் ரஹ்மான்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
தொடர்ந்து குறைந்து வரும் தங்கம் விலை… இன்று சவரன் எவ்வளவு?
தமிழ்நாட்டில் இருந்து வெளியேறுகிறதா சாம்சங்? : நிறுவன அதிகாரிகள் சொல்வதென்ன?