சிலிண்டர் விலை ரூ.100 குறைப்பு: பிரதமர் மோடி அறிவிப்பு!

Published On:

| By Selvam

PM Modi announce 100 reduce lpg cylinder

உலகம் முழுவதும் இன்று (மார்ச் 8) சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. இந்தநிலையில், மகளிர் தினத்தை முன்னிட்டு வீட்டு உபயோக சிலிண்டர் விலையை ரூ.100 குறைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

இதுகுறித்து பிரதமர் மோடி இன்று வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,

“மகளிர் தினத்தை ஒட்டி, வீட்டு உபயோக சிலிண்டர் விலையை ரூ.100 குறைக்க பாஜக அரசு முடிவு செய்துள்ளது.

இது நாடு முழுவதும் உள்ள லட்சக்கணக்கான குடும்பங்களின் நிதிச் சுமையை கணிசமாகக் குறைக்கும். குறிப்பாக, பெண்களின் முன்னேற்றத்திற்கு பயனளிக்கும்.

சமையல் எரிவாயுவை மிகவும் மலிவு விலையில் வழங்குவதன் மூலம், குடும்பங்களின் நல்வாழ்வை ஆதரிப்பதோடு ஆரோக்கியமான சூழலை உறுதி செய்வதையும் நோக்கமாகக் கொண்டுள்ளோம்.

இது பெண்களுக்கு அதிகாரம் அளிப்பது மற்றும் அவர்களுக்கு எளிதான வாழ்வை உறுதிசெய்வது போன்ற எங்கள் உறுதிப்பாடு ஆகும்” என்று தெரிவித்துள்ளார்.

செல்வம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

பியூட்டி டிப்ஸ்: அம்மைத் தழும்புகளை நீக்க ஆறு வழிகள்!

சிறுமி கொலை: புதுச்சேரியில் முழுஅடைப்பு போராட்டம்!

திருமண மண்டபத்தில் இயங்கும் வேளாண் கல்லூரி: மாணவர்கள் சாலை மறியல்!

பல்வேறு போராட்டங்கள்: மூன்று அடி இளைஞர் டாக்டரானது எப்படி?

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel