தாய்நாடான பாகிஸ்தானுக்கு மலாலா சென்றது எதற்காக?

Published On:

| By christopher

கல்வி ஆர்வலரான மலாலாவை 2012-ம் ஆண்டு அவர் பள்ளிச் சிறுமியாக இருந்தபோது, பாகிஸ்தானில் இயங்கிய தாலிபன் அமைப்பினரால் துப்பாக்கியால் சுட்டனர். அதன் பின்பு தன் தாய்நாடான பாகிஸ்தானுக்கு ஒரு சில முறை மட்டுமே வருகை புரிந்த மலாலா, நேற்று (ஜனவரி 11) பாகிஸ்தான் சென்றுள்ளார்.

அமைதிக்கான பரிசை முதன்முதலாகப் பெற்ற பாகிஸ்தானை சேர்ந்தவர் மலாலா.

பெண் கல்விக்காகக் குரல் கொடுப்பதே தன் பணி என 12 வயதில் போராடத் தொடங்கிய மலாலா, முஸ்லிம் சமூகங்களில் பெண் குழந்தைகளின் கல்வி எனும் தலைப்பிலான அனைத்துலக உச்சநிலைக் கூட்டத்தில் கலந்துகொள்ள இஸ்லாமாபாத் சென்றுள்ளார்.

பாகிஸ்தானியப் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் ஜனவரி 11ஆம் தேதி தொடங்கிவைத்த அந்த இரண்டு நாள் மாநாட்டில் முஸ்லிம்கள் அதிகம் வாழும் நாடுகளின் பிரதிநிதிகள் கலந்துகொள்கின்றனர்.

முன்னதாக இந்த மாநாட்டில் கலந்துகொள்வது தொடர்பாக, “பெண் கல்வியை ஊக்குவிக்கும் முக்கியமான மாநாட்டில் உலகெங்கும் உள்ள முஸ்லிம் தலைவர்களோடு கலந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்” என மலாலா தனது ‘எக்ஸ்’ தள பதிவில் தெரிவித்துள்ளார்.

அனைத்து பெண்களும் பள்ளி செல்வதற்கான உரிமையை பாதுகாப்பது குறித்தும் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான தாலிபன்களின் குற்றங்களுக்கு அவர்கள் ஏன் பொறுப்பேற்க வேண்டும் என்பது பற்றியும் இன்று (ஜனவரி 12) நடக்கும் மாநாட்டில் பேச உள்ளதாக மலாலா அதில் கூறியுள்ளார்.

உலகிலே பெண்கள் பள்ளி மற்றும் பல்கலைக்கழகம் சென்று கல்வி பயில தடை விதிக்கப்பட்டுள்ள ஒரே நாடு ஆப்கானிஸ்தான். 2021-ல் தாலிபன் ஆட்சிக்கு வந்த பிறகு ஆப்கானிஸ்தானில் பல ஒடுக்குமுறையை திணித்தது. ஆணுக்கும் பெண்ணுக்கும் இஸ்லாமிய சட்டம், உரிமைகளை உத்தரவாதமாக தருவதாக தாலிபன் நிர்வாகம் கூறுகிறது.

ஆனால், பெண்கள் ஆரம்பப் பள்ளியில் பயில மட்டுமே அனுமதிக்கப்படுகிறார்கள். பெரும்பாலும் பெண்கள் சுகாதாரம் மற்றும் கல்வி சார்ந்த பணியிடங்களில் பணிபுரியவும் அனுமதிக்கப்படுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ராஜ்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

டாப் 10 நியூஸ் : அயலகத் தமிழர் தின விழாவில் ஸ்டாலின் முதல் INDvsENG டி20 டிக்கெட் விற்பனை வரை!

கிச்சன் கீர்த்தனா: சண்டே ஸ்பெஷல்… எல்லாருக்கும் ஏற்றதா ஆஃப் பாயில்?

ஸ்டாலினுக்கு எதிராக எம்.ஜி.ஆரை கையிலெடுத்த விஜய்… எப்படியெல்லாம் யோசிக்குறாங்க!

புஸ்ஸி ஆனந்த் – ஜான் ஆரோக்கியசாமி… வெடித்த மோதல்- விஜய் பஞ்சாயத்து!

விமர்சனம்: வணங்கான்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share