80 நிமிடத்தில் 15.20 கோடி வருமானம் ஈட்டிய திருப்பதி தேவஸ்தானம்!

Published On:

| By Monisha

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சிறப்புத் தரிசனம் செய்வதற்கு ஆன்லைனில் வெளியிடப்பட்ட ரூ. 300 தரிசன டிக்கெட் 80 நிமிடங்களில் விற்றுத் தீர்ந்தது.

ஆந்திர மாநிலம் திருப்பதியில் உள்ள ஏழுமலையான் கோயிலுக்கு நாடு முழுவதிலும் இருந்து பக்தர்கள் தினந்தோறும் சென்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

இதனால் திருப்பதி கோயில் வளாகம் எப்போது பக்தர்கள் கூட்டத்துடன்தான் காணப்படும். ஏழுமலையானை பக்தர்கள் சிரமமின்றி தரிசனம் செய்யும் வகையில் தேவஸ்தானம் மூலம் மாதந்தோறும் 300 ரூபாயில் ஆன்லைன் தரிசன டிக்கெட்டுகள் வழங்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், டிசம்பர் மாதத்திற்கான ரூ.300 சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட்களை திருமலை திருப்பதி தேவஸ்தானம், நேற்று (நவம்பர் 11) காலை 10 மணிக்கு ஆன்லைனில் வெளியிட்டது.

சிறப்புத் தரிசன டிக்கெட் எப்போது வெளியாகும் என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்த பக்தர்கள் அந்த டிக்கெட் வெளியான உடனேயே முன்பதிவு செய்யத் தொடங்கிவிட்டனர்.

ரூ.300 தரிசன டிக்கெட்டுக்களை தேவஸ்தானம் வெளியிட்ட 80 நிமிடங்களிலேயே 5 லட்சத்து 6,600 பக்தர்கள் முன்பதிவு செய்துவிட்டனர்.

ஒரே நேரத்தில் அதிகளவு மக்கள் டிக்கெட் முன்பதிவு செய்யும் போது சர்வரில் பிரச்சனை ஏற்படுவது வழக்கம்தான்.

ஆனால், முன்பதிவு செய்யும் நேரத்தில் ஜியோ மார்ட்டின் கிளவுட் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டதால் பக்தர்கள் முன்பதிவு செய்யும் போது சர்வர் பிரச்சனை ஏற்படவில்லை. இதனால்தான் டிக்கெட் வெளியிடப்பட்ட உடனேயே 5 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்களால் 80 நிமிடங்களில் முன்பதிவு செய்ய முடிந்தது.

டிசம்பர் மாதத்துக்கான சிறப்பு நுழைவு ரூ.300 தரிசன டிக்கெட் விற்பனை மூலம் தேவஸ்தானத்திற்கு ரூ.15.20 கோடி வருமானம் கிடைத்துள்ளதாகத் தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மோனிஷா

செம்பரம்பாக்கம் ஏரி: உபரி நீர் திறப்பு அதிகரிப்பு!

கமலாலயத்தில் அமித்ஷா நடத்திய ஆலோசனை!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share