அமெரிக்காவில் 2001ஆம் ஆண்டு செப்டம்பர் 11ஆம் தேதியன்று அந்த நாட்டின் ராணுவ தலைமையகமான பென்டகன் மீதும், நியூயார்க் உலக வர்த்தக மையம் மீதும் பின்லேடன் ஆதரவு அல்கொய்தா பயங்கரவாதிகள் விமானங்களை மோதி பயங்கரவாத தாக்குதலில் ஈடுபட்டனர்.
அந்த தாக்குதலில் 3ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகினர். 10 ஆண்டுகள் கழித்து பின்லேடன் பாகிஸ்தானில் பதுங்கி இருந்தபோது 2011ஆம் ஆண்டு மே மாதம் 2ஆம் தேதி அமெரிக்க தாக்குதலில் கொல்லப்பட்டார்.
இந்த பின்லேடனின் 4-வது மகன் ஓமர் பின்லேடன் . இவர் ஓவியர், எழுத்தாளர், கலாசார தூதர், தொழில் அதிபர் என பலமுகங்களைக் கொண்டவர்.
இவர் பின்லேடனின் முதல் மனைவி நஜ்வாவுக்கு 1981ஆம் ஆண்டு பிறந்தவர். இவர், இங்கிலாந்தைச் சேர்ந்த தனது மனைவி ஜேன் என்ற ஜைனா பின்லேடனுடன் பிரான்சில் உள்ள நார்மண்டி என்ற இடத்தில் வசிக்கிறார்.

இந்நிலையில் ஓமர் பின்லேடன் இங்கிலாந்தில் இருந்து வெளிவரும் ’தி சன்‘ நாளிதளுக்கு சமீபத்தில் பேட்டியளித்துள்ளார்.
அப்போது அவர் பேசியதாவது, ”நான் ஆப்கானிஸ்தானில் உள்ள தோரா போராவில் குழந்தைப் பருவத்தைக் கழித்தேன். அங்கு எனது செல்ல நாய்கள் ரசாயன ஆயுதங்களை சோதிக்க பயன்படுத்தப்பட்டன.
என் அப்பாவின் உதவியாளர்கள் அந்த சோதனையில் ஈடுபட்டதை நான் நேரில் பார்த்திருக்கிறேன். எனக்கு அது சுத்தமாக பிடிக்கவில்லை.
எனக்கு பயங்கரவாத பயிற்சி முகாம்களில் ஏ.கே.47துப்பாக்கியால் சுடுவதற்கு பயிற்சி அளிக்கப்பட்டது. நான் பயங்கரவாதி ஆக வேண்டும் என்றுதான் அப்பா விரும்பினார். ஆனால் அவர் அல்-கொய்தாவில் இணைய சொல்லி என்னை வற்புறுத்தவில்லை.
நான் என்னால் முடிந்த அளவு, அந்த மோசமான தருணங்களை மறக்கத்தான் விரும்புகிறேன். நான் அவரை வெறுக்கவும் செய்கிறேன் , அதே நேரம் அவரை நேசிக்கவும் செய்கிறேன்.
அவர் என் தந்தை என்பதால் நேசிக்கிறேன். அவர் செய்த காரியங்களுக்காக அவரை வெறுக்கிறேன்” என்றார்.

மேலும் , நான் 2001ஏப்ரல் மாதம் ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறி விட்டேன். கடைசியாக நான் அப்பாவிடம் பேசியது, அவரிடம் விடைபெற்றபோது ‘குட்பை’ சொன்னதுதான். அவரும் எனக்கு ‘குட்பை’ சொன்னார்.
எனக்கு அந்த உலகம் போதும். நான் அங்கிருந்து வெளியேறியதில் அப்பா மகிழ்ச்சி அடையவில்லை. அதன்பின்னர் நான் அப்பாவிடம் பேசியதே இல்லை.
என் அப்பா கொல்லப்பட்டபோது நான் அழவில்லை. எல்லாமே முடிந்து விட்டது. நான் இனியும் கஷ்டப்பட விரும்பவில்லை. என்னையும் தவறாக நினைத்து விட்டார்கள்.
என் அப்பாவை அடக்கம் செய்திருந்தால் நன்றாக இருந்திருக்கும், அவரது உடல் எங்கே இருக்கிறது என்றாவது தெரிந்துகொண்டிருக்க முடியும்.
ஆனால் அதற்கான வாய்ப்பை அவர்கள் எங்களுக்கு தரவில்லை. அவரை அவர்கள் கடலில் வீசிவிட்டதாக சொன்னார்கள். ஆனால் நான்அதை நம்பவில்லை.
அவரதுஉடலை மக்கள் பார்ப்பதற்காக அமெரிக்காவுக்கு எடுத்துச்சென்று விட்டார்கள் என்றுதான் நான் நினைக்கிறேன். நான் வரையும் ஓவியங்கள்தான் என்னை நிம்மதி அடையவைக்கின்றன.
ஓவியம் தான் என்னை தனித்துவமான நபராக விளங்க வைக்கிறது ” என்று கூறியுள்ளார்.
மு.வா.ஜெகதீஸ் குமார்
திகட்டாத அழகு.. நச் போஸ் கொடுத்த தமன்னா.. தவிக்கும் ரசிகர்கள்..
அப்பளம் போல் நொறுங்கிய பேருந்து: மெட்ரோ பணியால் நிகழ்ந்த விபத்து!