இந்திய-பாகிஸ்தான் எல்லையில் இன்று (ஆகஸ்ட் 15) காலை ஏற்றப்பட்ட தேசிய கொடி இறக்கிடும் நிகழ்ச்சி மாலை நடைபெற்றது.
இன்று 77 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் கொடி ஏற்றப்பட்டது.
குறிப்பாக இந்திய-பாகிஸ்தான் எல்லையான அட்டாரி-வாகா பகுதியில் சுதந்திர தினத்தன்று கொடியை ஏற்றுவதும், இறக்குவதும் ஒவ்வொரு ஆண்டும் சிறப்பு கவனம் பெறும்.
அந்த வகையில் இந்த ஆண்டும் தேசிய கொடி இறக்கும் நிகழ்ச்சி இராணுவ அணிவகுப்புடன் மாலை நடைபெற்றது. தேசிய கொடி இறக்கும் நிகழ்ச்சியில் ஏராளமான மக்கள் கலந்து கொண்டனர். எல்லை பகுதி என்பதால் பலத்த பாதுகாப்பிற்கு மத்தியில், காலை ஏற்றப்பட்ட தேசிய கொடி இறக்கப்பட்டது.
இந்த நிகழ்வுகள் அனைத்தையும் அங்கு திரண்டிருந்த நூற்றுக்கணக்கான மக்கள் கண்டு களித்தனர்.
மோனிஷா
புல்வெளி புல்வெளி தன்னில் மழைத்துளி மழைத்துளி… : அப்டேட் குமாரு
’பாஜகவின் இரட்டை வேடத்தை பேசியுள்ளார் மோடி’: எதிர்க்கட்சிகள் விமர்சனம்!