2023ஆம் ஆண்டு நிறைவடையவுள்ளது. இந்நிலையில் இந்த ஆண்டு கூகுளில் அதிகம் தேடப்பட்ட செய்திகள், நிகழ்வுகள், திரைப்படங்கள், மீம்கள் போன்ற விவரங்களைக் கூகுள் நிறுவனம் வெளியிட்டுள்ளது.
இதில், “எப்படி” என்று கேள்வி எழுப்பி அதிகம் தேடப்பட்டவைகளில், ஆதாருடன் பான் இணைப்பை எப்படிச் சரிபார்க்கலாம் என்பது 8ஆவது இடத்தில் உள்ளது.
ஆதாருடன் பான் எண்ணை இணைப்பது கட்டாயம் என்று வருமான வரித்துறை உத்தரவிட்டது. இதற்காக ஜூன் 30, 2023 வரை கால அவகாசம் வழங்கப்பட்டது.
இந்த காலக்கெடுவுக்குள் ஆதார்- பான் எண்ணை இணைக்காதவர்களுக்கு தற்போது ரூ.1000 அபராதத்துடன் இணைக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் தான், ஆதாருடன் பான் இணைப்பை எப்படி சரிபார்ப்பது என பலரும் தேடியிருக்கிறார்கள்.
எப்படி தெரிந்துகொள்வது?
வருமான வரித் துறையின் அதிகாரப்பூர்வ இணையதளமான incometax.gov.in/iec/foportal/ இணையதளத்துக்குச் செல்ல வேண்டும்.
அதில் “Link Aadhaar” என்பதைத் தேர்வு செய்ய வேண்டும்.
அதில், பான் எண், ஆதார் எண் விவரம் கேட்கப்படும்.
பின் ‘‘View Link Aadhaar Status’ என்பதை கிளிக் செய்ய வேண்டும்.
இதையடுத்து பான்-ஆதார் எண் இணைக்கப்பட்டிருக்கிறதா? இல்லையா என்பதைக் காட்டும்.
பான் – ஆதார் இணைக்கப்பட்டிருந்தால், “இணைக்கப்பட்டது” என காட்டும்.
இல்லையெனில், இரண்டு கார்டுகளை இணைப்பதற்கான விவரங்களைக் காட்டும். இதன்மூலம் ஆதார்- பான் எண்ணை இணைக்கலாம்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
பிரியா
கூகுளில் அதிகம் தேடப்பட்ட டாப் 10 சுற்றுலா தலங்கள் இதோ!
25 ஆண்டுகளில் அதிகம் தேடப்பட்ட கிரிக்கெட் வீரர்… கூகுளே சொல்லிருச்சு பாருங்க!