-யதார்த்த ஜோதிடர் ஷெல்வீ
14.1.2025 முதல் 12.2.2025 வரை
நல்லவை நடக்கக் கூடிய காலகட்டம். அலுவலகத்தில் எதிர்பார்த்த மேன்மைகள் வரத்தொடங்கும். மூன்றாம் நபர் விஷயத்தில் மூக்கை நுழைக்க வேண்டாம்.
குடும்பத்தில் சீரானபோக்கு நிலவும். வாழ்க்கைத் துணையுடன் தர்க்கம் தவிருங்கள். வாரிசுகளால் பெருமை உண்டு. கடன்களை நேரடியாகப் பைசல் செய்யுங்கள்.
செய்யும் தொழிலில் உழைப்புக்கு ஏற்ப லாபம் வரும். கூட்டுத் தொழிலில் வீண் சந்தேகம் வேண்டாம். அரசு, அரசியலில் உள்ளோர் நிதானமாக இருங்கள். எதிர்பாலரிடம் எல்லை வகுத்துப் பழகுங்கள். கலை, படைப்புத் துறையினருக்கு வாய்ப்புகளில் அலட்சியம் கூடாது. ரகசியம் யாரிடமும் பகிர வேண்டாம்.
பயணத்தில் அவசரம் கூடாது. நரம்பு, எலும்பு, ரத்தநாள உபாதைகள் வரலாம். இஷ்டதெய்வ வழிபாடு இனிமை சேர்க்கும்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
தை மாத நட்சத்திர பலன்கள்: ரோகினி
தை மாத நட்சத்திர பலன்கள்: கிருத்திகை