தை மாத நட்சத்திர பலன்கள்: சதயம்

Published On:

| By Selvam


பொறுமையாக இருந்தால் பெருமை உயரும் காலகட்டம்.

பணியிடத்தில் உங்கள் திறமை பேசப்படும். உடனிருப்போர் பாராட்டு மகிழ்ச்சி தரும். சிலருக்கு திடீர் பதவி கிட்டும்.

குடும்பத்தில் குழப்ப சூழல் நீங்கும். வாரிசுகளால் பெருமை ஏற்படும். வயதில் பெரியவர்கள் உடல்நலத்தில் கவனம் செலுத்துங்கள்.

ஆடை, ஆபரணம் சேரும். சுபகாரியத் தடைகள் நீங்கும்.

செய்யும் தொழிலில் வளர்ச்சி ஏற்படும். புதிய ஒப்பந்தங்களால் நன்மை உண்டாகும்.

அரசு, அரசியலில் உள்ளோர்க்கு அனுகூலக் காற்று வீசும். மேலிடத்தின் நன்மதிப்பைப் பெறுவீர்கள்.

கலை, படைப்புத் துறையினர் கர்வம் விட்டால், சர்வம் நன்மையாகும்.

அயல்நாட்டு வாய்ப்பில் விதி மீறல் கூடாது.

அவசியமற்ற இரவுப் பயணம் தவிருங்கள்.

ஒற்றைத் தலைவலி, சளித் தொந்தரவு, விஷப்பூச்சிக்கடி உபாதைகள் வரலாம்.

பெருமாள் வழிபாடு, பெருமை சேர்க்கும்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share