அமைதியாகச் செயல்பட்டால், அனைத்திலும் வெல்லும் காலகட்டம்.
அலுவலகத்தில் திறமைக்கு உரிய உயர்வுகள் வரும். பிறரால் ஏற்பட்டிருந்த பழி நீங்கும். மேலதிகாரிகள் ஆதரவு கிட்டும்.
குடும்பத்தில் சுமுகப் போக்கு நிலவும். வார்த்தைகளில் நிதானம் இருந்தால் வாழ்க்கையில் இனிமை நீடிக்கும். எதிர்பார்த்த நற்செய்திகள் கைகூடி வரும். தம்பதியர் இடையே அன்யோன்யம் ஏற்படும்.
செய்யும் தொழிலில் தடைகள் நீங்கும். புதிய ஒப்பந்தங்களில் நிதானம் தேவை.
அரசு, அரசியலில் உள்ளோர் அமைதியாக இருப்பதே நல்லது. பொது இடங்களில் வாக்கு தருவதைத் தவிருங்கள்.
கலை, படைப்புத் துறையினருக்கு சாதமான சூழல் நிலவும். வாய்ப்புகள் வரும்போது வாய்ச்சவடால் தவிருங்கள்.
வாகனத்தில் வேகம் வேண்டவே வேண்டாம்.
முக உறுப்புகள், காது, மூட்டு உபாதைகள் வரலாம்.
சக்கரத்தாழ்வார் வழிபாடு சந்தோஷம் தரும்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
அதிமுக தொண்டர்களுக்கு எடப்பாடி சொன்ன மெசேஜ்!
விண்வெளித் துறைக்கு தனி அமைச்சகம்: சோம்நாத் அமைச்சர் ஆகிறாரா?