யதார்த்த ஜோதிடர் ஷெல்வீ
14.1.2025 முதல் 12.2.2025 வரை
ஏற்றங்கள் வரத்தொடங்கும் காலகட்டம்.
பணியிடத்தில் எதிர்பார்த்த உயர்வுகள் வந்து சேரும். உடனிருப்போரிடம் வீண் கோபம் வேண்டாம். அனுபவம் மிக்கவர்களை மதியுங்கள்.
வீட்டில் ஒற்றுமை இடம்பிடிக்கும். உறவுகள் வருகையும் அதனால் ஆதாயமும் உண்டு. வாழ்க்கைத் துணையுடன் தர்க்கம் தவிருங்கள்.
ஆடை, ஆபரணம் சேரும். பூர்வீக சொத்தில் வீண் பிடிவாதம் வேண்டாம்.
செய்யும் தொழிலில் லாபத்தின் அளவுகோல் அதிகரிக்கும். புதிய முதலீடுகளை நிதானத்துடன் செய்யுங்கள்.
அரசு, அரசியலில் உள்ளோர்க்கு ஆதரவு பெருகும். மேலிடத்தின் வார்த்தைகளை கனவிலும் மீறவேண்டாம்.
கலை, படைப்புத் துறையினரின் முயற்சிகள் பலன் தரத்தொடங்கும். வாய்ப்புகளை நேரடியாக கவனியுங்கள்.
தொலைதூரம் வாகனத்தைச் செலுத்துவோர்க்கு போதுமான ஓய்வு முக்கியம்.
மன அழுத்தம், தூக்கமின்மை, உடல் சோர்வு வரலாம்.
நரசிம்மர் வழிபாடு நன்மை தரும்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
சென்னை சங்கமம்… கிராமியக் கலைஞர்களுக்கு ஸ்டாலின் குட் நியூஸ்!
ஊருக்குச் சென்றவர்கள் சென்னைக்குத் திரும்ப சிறப்பு ரயில்கள்!