ஸ்மார்ட் சிட்டி இயக்கம் நீட்டிப்பு!

Published On:

| By Minnambalam Login1

current affairs tamil smartcity mission

இரண்டாயிரத்துப் பதினைந்தாம் ஆண்டு ஜூன் மாதம் துவங்கப்பட்ட ஒன்றிய அரசாங்கத்தின் ஸ்மார்ட் சிட்டி இயக்கம் (Smart City Mission) மார்ச் முப்பத்து ஒன்றாம் தேதி, இரண்டாயிரத்து இருபத்து ஐந்தாம் வருடம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. current affairs tamil smartcity mission

  • இவ்வியக்கம் தொடங்கப்பட்டதிலிருந்து பல புதுமையான விஷயங்களைச் செய்து வருகிறது.
  • அவை, இந்தியாவில் இருக்கும் நகரங்களுக்கு இடையே போட்டிகள் நடத்தி, அதில் நூறு நகரங்களைத் தேர்வு செய்தது, திட்டங்களைத் தேர்ந்தெடுப்பது, அத்திட்டங்களைச் செயல்படுத்த “ஸ்பெஷல் பர்பஸ் வெஹிகிள்”( Special Purpose Vehicle) என்ற குழு அமைத்தது போன்றவை.current affairs tamil smartcity mission
  • இதில் தேர்ந்தெடுக்கப்பட்ட நூறு நகரங்கள்,ஒரு  லட்சத்து அறுபதாயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள, எட்டாயிரத்திற்கும் அதிகமான திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன.

தற்போதைய நிலை:

  • இரண்டாயிரத்து இருபத்து நான்காம் வருடம் ஜூலை மூன்றாம் தேதியின் நிலவரப்படி,ஒரு லட்சத்து நாற்பத்து நாலாயிரத்து இருநூற்று முப்பத்து ஏழு கோடி(₹ 1,44,237 கோடி) மதிப்புள்ள, ஏழாயிரத்து நூற்று எண்பத்து எட்டு (7188) திட்டங்கள் முடிக்கப்பட்டுள்ளன.
  • மிச்சமுள்ள எண்ணூற்று முப்பது திட்டங்கள் முடிக்கும் தறுவாயில் உள்ளன.
  • ஒன்றிய அரசாங்கம் இந்த ஸ்மார்ட் சிட்டி இயக்கத்திற்கு நாற்பத்து எட்டாயிரம் கோடி ரூபாய் ஒதுக்கியிருந்தது. இதிலிருந்து தொண்ணூற்று ஏழு சதவீதப் பணத்தை தேர்தெடுக்கபட்ட நூறு நகரங்களுக்கு வினியோகித்துள்ளன. இந்த விநியோகிக்கப்பட்டப் பணத்தில், தொண்ணூற்று மூன்று சதவீதம் பயன்படுத்தப்பட்டுள்ளது.
  • எழுபத்து நான்கு நகரங்களுக்கு ஒன்றிய அரசாங்கம் தனது பங்கை முழுமையாக வழங்கி முடித்துள்ளது.
  • கடந்த சில மாதங்களாக, மிச்சமுள்ள பத்து சதவீதத் திட்டங்களை முடிப்பதற்கான கால அவகாசத்தை நீட்டிக்க கோரிப் பல மாநிலங்களிடமிருந்து ஒன்றிய அரசாங்கத்திற்கு விண்ணப்பங்கள் வந்துகொண்டிருந்தன.
  • அதையேற்ற ஒன்றிய அரசாங்கம், மார்ச் முப்பத்து ஒன்றாம் தேதி, இரண்டாயிரத்து ஐந்தாம் தேதிவரை இந்த ஸ்மார்ட் சிட்டி திட்டத்தை நீட்டித்துள்ளது.

ஸ்மார்ட் சிட்டி இயக்கத்தின் தேவை:

  • இந்தியாவின் முப்பத்து ஒரு சதவீத மக்கள் நகரங்களில் வாழ்கிறார்கள். அறுபத்து மூன்று சதவீத மொத்த உள்நாட்டு உற்பத்திக்கு இவர்கள்தான் காரணம். இது இரண்டாயிரத்து முப்பதில் எழுபத்தைந்து சதவீதமாக மாறும் என்று கணக்கிடப்பட்டுள்ளது.
  • அதனால் நம்முடைய நகரங்களை மேம்படுத்துவது முக்கியத்துவம் பெற்றது.இதன் விளைவாகத்தான் இந்த இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது.
இலக்கு:
  • நகர வாழ் மக்களின் அடிப்படை உள்கட்டமைப்பு தேவைகளைப் பூர்த்தி செய்வது.
  • தரமான வாழ்க்கை தரத்திற்கு வழிவகுப்பது.
  • சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் நிலையான வளர்ச்சி.
நிதி:
  • இந்தத் திட்டங்களுக்குத் தேவையான மொத்தப் பணத்தில், 45 சதவீதத்தை ஒன்றிய அரசாங்கம் மற்றும் அந்தந்த மாநில அரசாங்கங்கள் வழங்கும். மிச்சப் பணத்தைத் தனியார் பங்களிப்பின் மூலம் ஈட்டிக்கொள்ளவேண்டும்.

மாணவர்களுக்கான குறிப்பு:

  1. UPSC Civil Service GS-3 தாள் மற்றும் கட்டுரை எழுதுவதற்கு உதவும்.
  2. UPSC Civil Service Prelims மற்றும் TNPSC Group 2 மற்றும் Group 1 Prelimsக்கு உதவும்.
  3. பொருளாதார வளர்ச்சி சம்பந்தமான தாள்களுக்கு உதவிகரமாக இருக்கும்.

*இந்த செய்தித் தொகுப்பு UPSC, TNPSC Group 1, 2 போன்ற போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களுக்காக.

-அப்துல் ரஹ்மான்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்…. 

அஸ்தானாவில் நடக்கும் ஷங்காய் கூட்டுறவு அமைப்பின் உச்சிமாநாடு!!!

போலியோ தடுப்பில், உலக சுகாதார அமைப்பு.

ஏழாவது அட்டவணையின் முக்கியத்துவம்!!!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share