விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான ஆண்டவன் கட்டளை படத்தின் கதாசிரியராக பணியாற்றி பாராட்டை பெற்றவர் அருள் செழியன். இவர் வரும் 24ஆம் தேதி வெளியாக உள்ள ’குய்கோ’ திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அவதாரம் எடுத்துள்ளார்.
விதார்த் மற்றும் யோகி பாபு முன்னணி கதாப்பாத்தித்தில் நடிக்க, இளவரசு, முத்துகுமார், பிரியங்கா, துர்கா, வினோதினி வைத்தியநாதன் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களை ஏற்று நடித்துள்ளனர்.
எ.எஸ்.டி பிலிம்ஸ் தயாரித்துள்ள இப்படம் ரீலிசாக இன்னும் மூன்று நாட்களே உள்ள நிலையில் நடிகர் விஜய் சேதுபதி இன்று (நவம்பர் 21) டிரெய்லர் வெளியிட்டுள்ளார்.
https://twitter.com/VijaySethuOffl/status/1726926610660507667
அதில் சவுதியில் ஒட்டகம் மேய்த்து வரும் யோகிபாபு, அவரது தாய் இறந்துவிட்டதால் சொந்த ஊருக்கு வருகிறார். அப்போது அங்கு வைக்கப்பட்டிருந்த ‘பிரீஸர் பாக்ஸுடன் உடல் காணாமல் போய்விடுகிறது. அதனை எப்படி யோகிபாபுவும், விதார்த்தும் கண்டுபிடித்தார்கள் என்பது போல டிரெய்லர் வெளியாகியுள்ளது.
மேலும் ‘ஆடு மேய்ச்சவர ஆண்டவரா ஏத்துக்கிட்டாங்க… மாடு மேய்க்கிற என்ன மாப்பிளையா ஏத்துக்கிட மாட்டியா? போன்ற வசனங்கள் கவனம் ஈர்க்கின்றன.
ஷாருக்கானின் இந்தி பாடலை தழுவி அமைக்கப்பட்டுள்ள பாடல் காட்சிகளும் சுவாரசியம் சேர்க்கிறது.
பிரபல பின்னணி பாடகர் அந்தோணி தாசனின் இசையும், ராஜேஷ் யாதவ் ஒளிப்பதிவும் படத்திற்கு வலு சேர்க்கும் என்பது டிரெய்லரில் தெரிகிறது.
உணர்ச்சிகரமான கதைக்களத்தை நகைச்சுவை பின்னணியுடன் அருள் செழியன் இயக்கியுள்ள குய்கோ திரைப்படம் குடும்பத்துடன் பார்க்கும் விதமாக யூ சான்றிதழ் பெற்றுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
எடப்பாடி முன்னிலையில் அதிமுகவில் இணைந்த பாஜக எம்.எல்.ஏ மருமகன்!
அரசு பள்ளி குடிநீர் தொட்டியில் மலம்?: போலீஸ் விசாரணை!