தமிழ்ப் படமான விக்ரம் வேதாவின் இந்தி ரீமேக் ஓடிடி வெளியீட்டு உரிமத்தைப் பிரபல ஓடிடி நிறுவனம் கைப்பற்றியுள்ளது.
புஷ்கர்-காயத்ரி இயக்கத்தில் விஜய் சேதுபதி மற்றும் மாதவன் நடிப்பில் கடந்த 2017 ஜூலை 21ஆம் தேதி விக்ரம் வேதா திரையில் வெளியானது.
சாம் சி.எஸ். இசையமைத்த இந்த படத்தில் வரலட்சுமி சரத்குமார், ஷ்ரத்தா ஸ்ரீ நாத், கதிர் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.

இந்த படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பையும் திரைத்துறையில் வெற்றியையும் பெற்றது. 11 கோடி செலவில் உருவான இப்படம் 60 கோடிக்கும் மேல் வசூலித்து சாதனை படைத்தது.
தமிழில் மாபெரும் வெற்றியைக் கண்ட இப்படம் தற்போது இந்தியில் தயாராகி வருகிறது. இந்தி ரீமேக்கில் மாதவன் கதாபாத்திரத்தில் சைஃப் அலி கானும், விஜய்சேதுபதி கதாபாத்திரத்தில் ஹ்ரித்திக் ரோஷனும் நடித்துள்ளனர்.

தற்போது இந்த படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடைந்து வெளியீட்டிற்குத் தயாராகி வருகிறது. இப்படத்தின் டிரெய்லர் வரும் செப்டம்பர் 8 ஆம் தேதி வெளியாகவுள்ளது. மேலும் புரொடக்ஷன் வேலைகள் தீவிரமாக நடந்து வருகிறது.
175 கோடி பட்ஜெட் செலவில் விக்ரம் வேதா இந்தி ரீமேக் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த மாதம் இறுதியில் (செப்டம்பர் 30) படம் வெளியாகவுள்ளதாகப் படக்குழு அறிவித்துள்ளது.
ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இப்படத்தின் ஓடிடி வெளியீட்டு உரிமத்தைப் பிரபல ஒடிடி நிறுவனமான ”வூட் செலக்ட்” (voot select) கைப்பற்றியுள்ளது. இந்த ஓடிடி நிறுவனம் விக்ரம் வேதா படத்தின் தயாரிப்பு நிறுவனமான வயாகாம் நிறுவனங்களில் ஒன்று.
மோனிஷா
நீ போ… நீ வா… ஆமீர்கானை விட்டுவிட்டு, ஹிருத்திக்கை தாக்கும் நெட்டிசன்கள்!