ஹீரோவாக நடிக்கும் விஜய் சேதுபதியின் மகன்

Published On:

| By Selvam

தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழி படங்களில் பிஸியாக நடித்து வருபவர் நடிகர் விஜய் சேதுபதி.

தற்போது வெற்றிமாறன் இயக்கத்தில் விடுதலை 2 படத்தில் இவர் நடித்து வருகின்றார். இந்திய சினிமா மார்கெட்டில் உச்சத்தில் இருக்கும் விஜய் சேதுபதியின் மகன் சூர்யாவும் தற்போது ஒரு புதிய படத்தில் ஹீரோவாக நடிக்கிறார்.

‘பீனிக்ஸ் வீழான்’ என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ள அந்த படத்தை பிரபல சண்டை இயக்குனர் அனல் அரசு இயக்குகிறார்.

பிரேவ் மேன் பிக்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க, சாம்.சி.எஸ் இசையமைக்கிறார். இந்த படத்தின் பூஜை இன்று (நவம்பர் 24) சென்னை ஏ.வி.எம் ஸ்டுடியோவில் நடைபெற்றது. இன்று முதல் படப்பிடிப்பு தொடங்குவதை அறிவிக்கும் வகையில் பீனிக்ஸ் வீழான் படத்தின் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.

– கார்த்திக் ராஜா

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

குஷ்பு மீது காவல்நிலையத்தில் விசிக புகார்!

மன்சூர் அலிகான் முன் ஜாமீன்: தீர்ப்பு ஒத்திவைப்பு!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share