அர்ஜுன் ரெட்டி படத்தின் வெற்றிக்கு பிறகு நடிகர் விஜய் தேவரகொண்டாவை குடும்பங்கள் கொண்டாடும் நாயகனாக மாற்றிய படம் “கீதா கோவிந்தம்”. அந்த படத்தை பரசுராம் இயக்கியிருந்தார்.
கீதா கோவிந்தம் படத்தின் வெற்றிக்கு பிறகு இயக்குனர் பரசுராம் இயக்கத்தில் மகேஷ் பாபு நடிப்பில் வெளியான சர்க்கார் வாரி பட்டா திரைப்படம் சூப்பர் ஹிட் அடித்தது.
அதன் பிறகு மீண்டும் இயக்குனர் பரசுராம் மற்றும் நடிகர் விஜய் தேவரகொண்டா இணைந்து ஒரு புதிய படத்தில் பணியாற்ற உள்ளனர் என்ற தகவல் வெளியானவுடன் அந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்தது.
பரசுராம் – விஜய் தேவரகொண்டா கூட்டணியில் உருவாகியுள்ள படத்திற்கு “ஃபேமிலி ஸ்டார்” என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.
இந்த படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா க்ரியேஷன் சார்பில் பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜு தயாரித்துள்ளார். கோபிசுந்தர் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.
ஃபேமிலி ஸ்டார் படத்தில் நடிகர் விஜய் தேவரகொண்டா விற்கு ஜோடியாக மிருணாள் தாகூர் நடித்துள்ளார். மிருணாள் தாகூர் நடிப்பில் வெளியான சீதா ராமம் மற்றும் ஹாய் நான்னா ஆகிய தெலுங்கு படங்கள் மெகா ஹிட் அடித்ததால் தற்போது தெலுங்கு திரையுலகில் லக்கி ஹீரோயின் ஆக மிருணாள் தாகூர் வலம் வந்து கொண்டிருக்கிறார்.
இந்நிலையில் தற்போது ஃபேமிலி ஸ்டார் படத்தின் டீசர் வெளியாகி உள்ளது. அதில் தனது குடும்பத்தினர் முன் அன்பான மனிதனாகவும், அதே குடும்பத்திற்கு ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டால் அதிரடி ஆக்சன் ஹீரோவாகவும் மாறும் ஒரு பக்கா கமர்ஷியல் கதாநாயகனாக நடிகர் விஜய் தேவராகொண்டா ஃபேமிலி ஸ்டார் டீசரில் தெரிகிறார்.
மேலும் இந்த படம் வரும் ஏப்ரல் 5 ஆம் தேதி வெளியாகும் என்று டீசரில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கடைசியாக நடிகர் விஜய் தேவரகொண்டா சமந்தாவுடன் நடித்த குஷி படம் கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தாலும் பாக்ஸ் ஆபிஸில் நல்ல வசூலை பெற்றது.
ஆனால் இந்த முறை ஃபேமிலி ஸ்டார் படத்தின் மூலம் விஜய் தேவரகொண்டா, குடும்பங்கள் கொண்டாடும் ஒரு மெகா ஹிட் கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
– கார்த்திக் ராஜா
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பெங்களூரு குண்டுவெடிப்பு : சென்னை இளைஞர்களுக்கு தொடர்பா?
வேலைவாய்ப்பு:. திருச்சி என் ஐ டி யில் பணி!
Video : சிக்ஸர் அடித்து கார் கண்ணாடியை உடைத்த ஆர்.சி.பி வீராங்கனை!