ஏஜிஎஸ் என்டர்டைன்மெண்ட்ஸ் நிறுவனம் தயாரிப்பில் இயக்குனர் வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் நடிகர் விஜய்யின் 68 வது படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
தளபதி 68 படத்தில் நடிகர் விஜய்யுடன் இணைந்து நடிகர் பிரசாந்த், நடிகர் பிரபு தேவா,நடிகர் மோகன், நடிகை மீனாட்சி சவுத்ரி, நடிகை சினேகா, நடிகை லைலா, நடிகர் அஜ்மல் ஆகியோர் நடித்து வருகின்றனர். தளபதி 68 படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.
தளபதி 68 ஏஜிஎஸ் என்டர்டைன்மெண்ட்ஸ் நிறுவனம் தயாரிக்கும் 25வது படம் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் தளபதி 68 படத்தில் வரும் பிளாஷ்பேக் காட்சியில் விஜய்யை இளமையாக காண்பிக்க டி-ஏஜிங் (DE-AGEING) தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டு உள்ளதாகவும் இந்த 10 நிமிட காட்சிக்காக 6 கோடி ரூபாய் செலவாகி உள்ளதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
– கார்த்திக் ராஜா
இந்தியா- தென் ஆப்பிரிக்கா முதல் டி20 போட்டி இன்று தொடக்கம்… மைதானம் யாருக்கு சாதகம்?
டெங்கு பாதிப்பு கட்டுக்குள் உள்ளது: அமைச்சர் மா.சுப்பிரமணியன்