தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தில் 26 செயற்குழு உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்காக நடத்தப்பட்ட தேர்தலில் தேவயானி முதலிடத்தை பெற்றுள்ளார்.
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு ஏப்ரல் 30-ஆம் தேதி நடைபெற்ற தேர்தலில் பதிவான வாக்குகள் மே 1-ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டது.

அதன்படி தலைவராக என்.இராமசாமி என்கிற முரளி இராமநாராயணன், துணைத்தலைவர்களாக தமிழ் குமரன், அர்ச்சனா கல்பாத்தி, செயலாளர்களாக கதிரேசன், ராதாகிருஷ்ணன், பொருளாளராக சந்திரபிரகாஷ் ஜெயின், இணைச்செயலாளராக சௌந்தரபாண்டியன் ஆகியோர் வாக்கு எண்ணிக்கை அடிப்படையில் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டது.
26 செயற்குழு உறுப்பினர்களுக்கான வாக்கு எண்ணிக்கை நேற்று (மே 3) எண்ணப்பட்டு பிற்பகல் முடிவுகள் அறிவிக்கப்பட்டது. இதில் மன்னன் தலைமையிலான அணியில் போட்டியிட்ட நடிகையும், தயாரிப்பாளருமான தேவயானி அதிகமான வாக்குகளை பெற்று முதல் இடத்தை பெற்று வெற்றி பெற்றிருக்கிறார்.
கடந்த முறை நடைபெற்ற தேர்தலில் செயற்குழு உறுப்பினர்களில் 800 க்கும்அதிகமான வாக்குகளை பெற்று முதல் இடத்தை பெற்று வெற்றிபெற்றார் இயக்குநர் R.V.உதயகுமார். இந்த முறை அவர் போட்டியிடவில்லை.

தமிழ் சினிமாவில் முன்னணி தயாரிப்பு நிறுவனமான திருப்பதி பிரதர்ஸ் சார்பில் போட்டியிட்ட சுபாஷ் சந்திர போஸ் 598 வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்தையும், இயக்குநரும் நடிகருமான சித்ராலட்சுமணன் 580 வாக்குகள் பெற்று மூன்றாம் இடத்தையும் சங்கத்தின் முன்னாள் பொருளாளர் அழகன் தமிழ்மணி 573 வாக்குகள் பெற்று நான்காவது இடத்தையும் பெற்றுள்ளார். தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தேர்தலில் திமுகவை சேர்ந்த தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர் அம்பேத்குமார் செயற்குழு உறுப்பினர் பதவிக்கு போட்டியிட்டு வெற்றிபெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
வெற்றி பெற்ற செயற்குழு உறுப்பினர்களில் முரளி ராமசாமி அணியை சார்ந்த 20 பேரும் மன்னன் அணி சார்பில் போட்டியிட்டவர்களில் 6 பேரும் வெற்றிபெற்றுள்ளார்கள். சுயேட்சைகள் யாரும் இந்த தேர்தலில் வெற்றிபெறவில்லை.
வெற்றிபெற்றவர்கள் விவரம்:
தேவயானி 642
சுபாஷ் சந்திரபோஸ் 598
சித்ராலட்சுமணன் 580
அழகன் தமிழ் மணி 573
மனோஜ்குமார் 564
அன்பு 545
மாதேஷ் 531
ஷக்தி சிதம்பரம் 517
திருமலை 515
ஹெச்.முரளி 496
எம்.கபார் 496
அம்பேத்குமார் 492
விஜயமுரளி 491
பி.டி.செல்வகுமார் 488
டில்லிபாபு 481
ஏ.எல்.உதயா 481
ஜோதி 475.
சுரேஷ் 473
பழனிவேல் 469
ப்ரவீண்காந்த் – 464
பைஜாடாம் 447
செந்தில்குமார் 431
கமலகண்ணன் 421
ராமச்சந்திரன் 399
செந்தாமரைகண்ணன் 392
நீல்கிரீஷ் முருகன் 392
ஆகியோர் தேர்வாகி உள்ளனர்.
இராமானுஜம்
கீழ்பவானி ஆற்றில் கான்கிரீட் தளம்: சீமான் எதிர்ப்பு!
ஓட்டுநர்கள் பற்றாக்குறை… நடத்துநர்களுக்குப் பணி மறுப்பதா? அன்புமணி ராமதாஸ்