‘டாணாக்காரன்’ இயக்குநர் தமிழின் அடுத்த படம் குறித்த புதிய தகவல்கள் தற்போது வெளியாகி இருக்கின்றன.
விக்ரம் பிரபு நடிப்பில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற படம் ‘டாணாக்காரன்’. போலீஸ் பயிற்சி மையத்தினை சுற்றி அமைக்கப்பட்டிருந்த படத்தின் திரைக்கதையை படம் பார்த்த அனைவருமே பாராட்டி இருந்தனர்.
படத்தின் வெற்றியால் தமிழின் அடுத்த படம் குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் நிலவியது. இந்தநிலையில் தன்னுடைய அடுத்த படத்தில் கார்த்தியை தமிழ் இயக்கவுள்ளதாக நம்பத்தகுந்த தகவல்கள் வெளியாகி உள்ளன.
தற்போது இப்படத்திற்கான முன் தயாரிப்பு பணிகளில் தமிழ் ஈடுபட்டு இருக்கிறாராம். கார்த்தி கைவசம் ‘வா வாத்தியாரே’, ‘மெய்யழகன்’, ‘சர்தார் 2’, ‘கைதி 2’ மற்றும் ஹெச்.வினோத் படம் என ஏராளமான படங்கள் உள்ளன.
இவற்றை முடித்துக்கொடுத்து விட்டு இந்த படத்தில் நடிக்கவிருக்கிறாரா? இல்லை குறுகிய கால தயாரிப்பாக விரைவிலேயே ஷூட்டிங் தொடங்கி படத்தினை முடித்து விடத்திட்டமா? என்பது தெரியவில்லை.
என்றாலும் கார்த்தி – தமிழ் படம் குறித்த அறிவிப்பு விரைவிலேயே வெளியாகும் என கூறப்படுகிறது. இருவருமே கதைக்கு அதிக முக்கியத்துவம் அளிப்பவர்கள் என்பதால் இப்படத்தின் மீதான எதிபார்ப்பு தற்பொழுதே உருவாகிவிட்டது.
–மஞ்சுளா
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
எலக்ஷன் ஃப்ளாஷ்: கமல் போட்டியிடும் தொகுதி எது?
எலக்ஷன் ஃபிளாஷ்: கள்ளக்குறிச்சி வேட்பாளர் ஆதவ் அர்ஜுனாவா? ஸ்டாலின் முடிவு என்ன?