சென்னை எக்ஸ்பிரஸ் முதல் ஜவான் வரை : ஷாருக்கானின் லுங்கி டான்ஸ்!

Published On:

| By Kavi

‘சென்னை எக்ஸ்பிரஸ்’ படத்தில் இடம்பெற்ற ஹிட் பாடலான லுங்கி டான்ஸில் ஷாருக் கானின் மறக்க முடியாத பங்களிப்பு ஜவானிலும் தொடர்கிறது.

ஜவானில் ஷாருக்கானின் சமீபத்திய ஹிட் பாடலான ‘வந்த எடம்‘ பாடலிலும் ஷாருக் கான் லுங்கியுடன் இணைந்திருப்பது விவரிக்க இயலாத ஒரு அற்புதமான உணர்வு.

சமீபத்தில் வெளியிடப்பட்ட ஜவானின் முதல் பாடல் வெளியான பிறகு.. உலகளாவிய இசை அட்டவணையில் முதலிடத்தில் உள்ளது

‘வந்த எடம்’ பாடலில் மீண்டும் ஒரு முறை அவர் லுங்கியை முன்னிறுத்தி இருக்கிறார். இது ஷாருக்கானின் நட்சத்திர ஆற்றல் மட்டுமல்ல.. ரசிகர்கள் பேசுவதையும் குறிப்பிடுகிறது. லுங்கியின் தொடர்ச்சியான இருப்பு .. ரசிகர்களால் கவனிக்கப்படுகிறது. ஆயிரக்கணக்கான பின்னணி நடன கலைஞர்கள் லுங்கி அணிந்து, ஒரு தனித்துவமான  நடனத்தையும், நடிப்பையும் வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.

பிளாக்பஸ்டர் ஹிட்டான ‘சென்னை எக்ஸ்பிரஸ்’ படத்தில் இடம்பெற்ற ‘1234 கெட் ஆன் தி  டான்ஸ் ஃப்ளோர்..’ என்ற பாடலுக்குப் பிறகு பிரியாமணி மீண்டும் ஒரு முறை ஷாருக்கானுடன் ஜவான் படத்தில் நடனமாடியுள்ளார்.

தற்போது இந்த பாடல் யூட்யூப்பில் 24 மணி நேரத்தில் 46 மில்லியனுக்கும் மேற்பட்ட பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டு உலக இசை அரங்கில் பெரும் புயலை ஏற்படுத்தியிருக்கிறது.

‘ஜவான்’ படத்தை ரெட் சில்லிஸ் என்டர்டெயின்மென்ட் வழங்க, அட்லீ இயக்கியுள்ளார். கௌரி கான் தயாரித்துள்ளார். கௌரவ் சர்மா இணை தயாரிப்பாளராக பணியாற்றியுள்ளார். இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் எதிர்வரும் செப்டம்பர் 7ஆம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.

இராமானுஜம்

மகனை நேசிக்கும் தாய்மை மருமகளையும் நேசிப்பதற்கு!

காவிரி நீர்…விவசாயிகளை ஒன்றிணைத்து போராட்டம்: எடப்பாடி பழனிசாமி

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share