ரத்னவேல் கதாபாத்திரம்: பேஸ்புக் கவர் போட்டோவை நீக்கிய பகத் பாசில்

Published On:

| By Jegadeesh

fahadh who deleted his Facebook cover photo

நடிகர் பகத் பாசில் தனது பேஸ்புக் கவர் போட்டோவை நீக்கியுள்ளார்.

மாரி செல்வராஜ் இயக்கத்தில் வடிவேலு, உதயநிதி ஸ்டாலின், பகத் பாசில், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த ஜூன் மாதம் வெளியான திரைப்படம் மாமன்னன். இந்த படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.

இதையடுத்து மாமன்னன் திரைப்படம் கடந்த வாரம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியானது.

ஓடிடி டிரெண்ட்டிங்கிலும் இந்தப் படம்  முதலிடம் பிடித்த நிலையில் இந்த படத்தில் வில்லனாக நடித்திருந்த பகத் பாசிலின் ரத்னவேலு கதாபாத்திரம் ஒரு தரப்பு ரசிகர்களால் கொண்டாடப்பட்டது. அவர் தொடர்பான காட்சிகளை சுய சாதி பெருமை பேசும் பாடல்களுடன்  எடிட் செய்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டனர்.

article_image5

இது தொடர்பான  மீம்ஸ் மற்றும் வீடியோக்கள் கடந்த சில நாட்களாக சமூகவலைதளங்களில் வைரலானது. தனது கதாபாத்திரத்திற்கு கிடைத்த வரவேற்பால் மகிழ்ச்சியடைந்த நடிகர் பகத் பாசில், ரத்தினவேலு கதாபாத்திரத்தின் புகைப்படங்களை தனது பேஸ்புக்  கவர் போட்டோவாக நேற்று (ஆகஸ்ட் 1) மாற்றினார்.

 

 

இதை பார்த்த மற்றொரு தரப்பு பகத் பாசிலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில், தன்னுடைய கவர் போட்டோவை பகத் பாசில் தற்போது நீக்கியுள்ளார்.  மேலும்,  அதற்கு பதிலாக எந்த புகைப்படத்தையும் பதிவிடாமல் காலியாக விட்டுள்ளார்.

மு.வா.ஜெகதீஸ் குமார்

WI vs IND: ஒரு கேப்டனாக… வெற்றி குறித்து ஹர்திக் பாண்ட்யா

கோயம்பேடு சந்தையில் தக்காளி விலை குறைவு!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share