அர்ஜுன் ரெட்டி, கபீர் சிங் போன்ற படங்களை இயக்கிய சந்தீப் ரெட்டி இயக்கத்தில் நடிகர் ரன்பீர் கபூர் நடிப்பில் வெளியாகி உள்ள படம் “அனிமல்”. இந்த படத்தில் ரன்பீர் கபூருக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். அனில் கபூர், பாபி தியோல் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள்.
அனிமல் படத்தில் அதிக வன்முறைகள் காட்சிகள் இருந்ததால் படத்திற்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்தது. ஆனாலும் பாக்ஸ் ஆபிஸில் அனிமலின் வசூல் வேட்டை தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது.
டிசம்பர் 01 ஆம் தேதி வெளியான அனிமல் படத்தின் முதல் நாள் வசூல் மட்டுமே 116 கோடி ரூபாய், இரண்டாம் நாள் 236 கோடி ரூபாய், மூன்றாம் நாள் 356 கோடி ரூபாய், நான்காம் நாள் 425 கோடி ரூபாய் என்று அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் இன்று அனிமல் படம் வெளியாகி ஐந்து நாள்களில் 481 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
He is the Box Office #Animal🔥🪓#AnimalHuntBegins #BloodyBlockbusterAnimal #AnimalInCinemasNow #AnimalTheFilm #AnimalHuntBegins
Book Your Tickets 🎟️ https://t.co/kAvgndK34I#AnimalInCinemasNow #AnimalTheFilm @AnimalTheFilm @AnilKapoor #RanbirKapoor @iamRashmika… pic.twitter.com/nAwA2uUvaF
— Animal The Film (@AnimalTheFilm) December 6, 2023
ஷாருக்கானின் ஜவான் படத்திற்கு பின் சல்மான் கானின் டைகர் 3 படம் தான் அதிக வசூல் செய்யும் என்று அனைவரும் எதிர்ப்பார்த்து கொண்டிருந்த நிலையில் யாரும் எதிர்பார்க்காத வகையில் ரன்பீர் கபூர் அனிமல் படம் மூலம் பாக்ஸ் ஆபிஸில் கலக்கி கொண்டிருக்கிறார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கார்த்திக் ராஜா