தெலுங்கு திரையுலகில் பிரபல நடிகராக இருக்கும் நாக சைதன்யாவும், நடிகை சோபிதா துலிபாலாவும் இருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
அதோடு சோபிதாவை சைதன்யா காதலிக்கிறாரா, இது டேட்டிங் சென்ற போது எடுத்த புகைப்படமா என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
நாக சைதன்யா – சமந்தா விவாகரத்து
தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கும் சமந்தாவை நாக சைதன்யா கடந்த 2017 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமணம் கோவாவில் மிகப் பிரமாண்டமாக நடைபெற்றது.

சிறந்த நட்சத்திர ஜோடிகளாக திருமணத்திற்கு பிறகும் நடிப்பில் கவனம் செலுத்தி வந்த இவர்கள் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால், இவர்களது திருமண வாழ்க்கை விவாகரத்தில் முடிந்தது. கடந்த ஆண்டு முதல் இருவரும் தொடர்ந்து தனித்தனியே தங்களது திரை பயணத்தில் கவனம் செலுத்தி வருகின்றனர்.
சோபிதாவுடன் காதலா?
இந்நிலையில் கடந்த சில மாதங்களாக நாக சைதன்யா மற்றும் நடிகை சோபிதா துலிபாலா இருவரும் காதலித்து வருவதாக செய்திகள் வெளியாகின.
இதனை இருவரும் உறுதிப்படுத்தவில்லை. இந்த தகவலுக்கு நாக சைதன்யா “எனக்கு சிரிக்க தான் தோன்றுகிறது” என்று கருத்து தெரிவித்திருந்தார்.
தற்போது இருவரும் லண்டனிற்கு சுற்றுலா சென்று டேட்டிங் செய்யும் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இந்த புகைப்படத்தைப் பார்த்த ரசிகர்கள் பலரும் விவாகரத்து செய்து ஒரு வருடம் கூட முடியாத நிலையில் நாக சைதன்யா வேறு நடிகையைக் காதலிக்கிறாரா? என்றும் இது அதிர்ச்சியான தகவலாக இருப்பதாகவும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
புகைப்படம் உண்மையா?
மேலும் ரசிகர்கள் பலர் இது உண்மையான புகைப்படம் அல்ல, ‘எடிட்’ செய்யப்பட்டுள்ளதாகவும் புகைப்படத்தில் இருக்கும் தரையை உற்றுக் கவனித்தால் எடிட் செய்தது நன்றாகவே தெரிவதாகவும் கூறுகின்றனர்.
இதனால் இந்த புகைப்படம் உண்மையானதா? அல்லது எடிட் செய்யப்பட்ட புகைப்படமா? என்று குழப்பம் ஏற்பட்டுள்ளது.
பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் வானதி கதாபாத்திரத்தில், அதாவது அருண்மொழிவர்மனுக்கு (ஜெயம்ரவி) ஜோடியாக சோபிதா துலிபாலா நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மோனிஷா