மோகனின் ஹரா… ஓடிடி ரிலீஸ் தேதி!

Published On:

| By Kavi

மோகன் நடிப்பில் வெளியான ஹரா திரைப்படம் ஓடிடியில் வெளியாகவுள்ளது.

கோயம்புத்தூர் எஸ்.பி.மோகன் ராஜ் மற்றும் ஜி மீடியா ஜெயஸ்ரீ விஜய் தயாரிப்பில், விஜய்ஸ்ரீயின் இயக்கத்தில், நடிகர் மோகன் நடிப்பில் வெளியான படம் ஹரா.

யோகி பாபு, சாருஹாசன், சுரேஷ் மேனன், மொட்டை ராஜேந்திரன், வனிதா விஜயகுமார், தீபா, மைம் கோபி உள்ளிட்ட ஏராளமான நடிகர்கள் இப்படத்தில் நடித்திருந்தனர்.

14 வருடங்களுக்குப் பிறகு மோகன் ரீ-என்ட்ரி கொடுத்த படம் ஹரா.

கடந்த ஜூன் 7-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இது மோகனுக்கு கம்பேக் படமாக அமையும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், எதிர்மறையான விமர்சனங்களை பெற்றது.

இந்த நிலையில் வரும் ஜூலை 5 ஆம் தேதி ஹரா திரைப்படம் ஆஹா ஓடிடியில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஹரா வெளியீட்டுக்கு முன்னதாக ராமராஜன் நடிப்பில் வெளியான சாமானியன் இன்னும் ஓடிடியில் வெளியாகவில்லை. கருடன் திரைப்படம் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் இன்று வெளியானது.

இந்தசூழலில் ஹரா ஓடிடி தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

தியேட்டரை பொறுத்தவரை இந்த வார வெள்ளிக்கிழமை பெரிய படங்கள் எதுவும் வெளியாகவில்லை. அடுத்த வாரம் கமல்ஹாசன் நடிப்பில் இந்தியன் 2 வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….

பிரியா

 மத்திய அமைச்சர் திரு ஜி கிஷன் ரெட்டி (நிர்மான்) இணையத்தளத்தை ஜூலை 2-ம் தேதி தொடங்கி வைத்தார்.

சாமியாரின் கூட்டத்தில் பறிபோன 121 உயிர்கள்…யார் இந்த போலே பாபா? கூட்டத்தில் என்ன நடந்தது?

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel